உயரமான கயான் கட்டிடத்தில், தொங்கிய மாடல் அழகி !

ரஷியாவின் பிரபல மாடல் அழகி ஏஞ்சலினா நிக்கோலு. 23 வயதான இவர் ரஷியா மட்டு மல்லாமல் பல்வேறு சர்வதேச நிறுவன ங்களுக்கு விளம்பர மாடல் அழகியாக உள்ளார். 
உயரமான கயான் கட்டிடத்தில், தொங்கிய மாடல் அழகி !
துபாய் வந்த அவர் இங்குள்ள உயரமான கட்டிட ங்களில் ஒன்றான கயான் கட்டிடத்தின் உச்சிக்கு தன் ஆண் நண்பருடன் சென்றார்.

1,004 அடி உயர அந்த கட்டிடத்தின் உச்சியின் விளிம்பில் உயிரை பணயம் வைத்து ஆண் நண்பரின் கையை பிடித்துக் கொண்டு கீழே தொங்கியபடி படம் எடுத்துக் கொண்டார். 

அப்போது, பாதுகாப்பு க்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளோ அல்லது இந்த படங்களை எடுத்துக் கொள்ள அனுமதியோ பெற வில்லை.

தனது துணிச்சலை உலகுக்கு தெரியப் படுத்தும் வகையில் இந்த படங்களை அவர் சமூக வலைத் தளங்களில் வெளி யிட்டார்.

இந்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மாடல் அழகியின் அபாய துணிச்சல் காட்சியை பார்த்து பலர் வியந்து பாராட்டும் நேரத்தில் கடும் கண்டனங் களும் வெளியாகி உள்ளன. 
ரஷிய மாடல் அழகியின் இந்த ஆபத்தான புகைப்பட காட்சியை பார்த்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த காட்சியை பார்த்த பலர், சமூக வலைத் தளங்களில் “இவர் இளைஞர் களுக்கு ஒரு கெட்ட உதாரணமாக உள்ளார். 

கடவுள் உங்களுக்கு அழகை கொடுத்த அளவுக்கு அறிவை கொடுக்க வில்லை” என கடுமையாக சாடியுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings