முதல்வர் பன்னீர்செல்வம், கவர்னரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளிக்காததால், அதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்க, கவர்னர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதம், கவர்னர் சென்னையில் இல்லாத போது, ‘மெசெஞ்சர் மற்றும் பேக்ஸ்’ மூலம் அனுப்பப்பட்டுள்ளது;
அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஆனால், முதல்வர் தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னரை நேரில் சந்தித்து வழங்கா விட்டால், அதை ஏற்பதும், நிராகரிப்பதும் கவர்னரின் உரிமை.
அதாவது, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி, மிரட்டலுக்கு பயந்து, ‘பேக்ஸ்’ அனுப்பலாம் என்பதால் அந்த ராஜினா மாவை ஏற்காமல்,
கவர்னர் நிராகரிக்கலாம் என, சட்டத்தில் இடம் உள்ளதாக பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட் டுள்ளது.
இதுகுறித்து, கவர்னர் அலுவலகத்தில் இருந்து, மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் நீதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட் டுள்ளதாக கூறப் படுகிறது.
அதேபோல, கட்சியின் பொதுச்செயலராக, தற்காலிகமாக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவின் நியமனம், கட்சியின் சட்ட விதிகளின்படி செல்லாது என, பன்னீர்செல்வம் தரப்பில் கவர்னரிடம் முறையிடப் பட்டது.
இந்த பிரச்னை தொடர் பாகவும், தேர்தல் ஆணையத்தின் கருத்தை, கவர்னர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் பன்னீர் செல்வம் கட்சி பதவியான சசியின் பொதுச்செயலாளா் பதவிக்கு ஆப்பு வைத்து விட்டார் என்று அரசியல் வல்லுனா்களால் கூறப்படுகிறது.