பழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பக்கம் 22 ஏக்கர் நிலப்பரப்பில் இசையமைப்பாளா் கங்கை அமரனுக்கு ஒரு பண்ணை வீடு உண்டு.
பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டை, அந்த வழி சென்று வந்த சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட, அவ்வளவு தான். அவரிடம் அதை வாங்க, முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புகிறார் என்று சொல்ல,
அவரும் பொக்கெயுடன் போயஸ் தோட்டம் வந்து இருக்கிறார். முதலவர் வர, அவரிடம் பொக்கே கொடுக்க, வாங்கிக் கொண்டு முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.
கொஞ்ச நாட்களில், பாஸ்கரன் கங்கையமரனின் வீட்டிற்கு வந்து, வீட்டை விற்க சொல்லி கேட்க, அவர் முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
அதன் பின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர் பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளுடன் வந்து மிரட்டி, தன் பேரில் அந்த வீட்டை பதிந்து கொண்டனராம்.
இத ுகுறித்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் பேசியவர், இப்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலையில்,தைரியமாக இன்று, என் வீட்டை திருப்பி தா.
நேற்று சசிகலாவிடம் கங்கை அமரன் திருப்பூரில் பத்திரிகை மீட்டில் கேட்டுள்ளார்.