தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்திய மாணவி !

35 தங்கம், 25 வெள்ளி, 23 வெண்கலம் வென்று அசத்தல்: இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம்பிடித்த மதுரை கல்லூரி மாணவி. மதுரை வளர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஜி. வர்ஷா.
தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்று அசத்திய மாணவி !
துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான இவர் கடந்த 8 ஆண்டுகளில் தேசிய, தென் இந்திய, தமிழக அளவிலான போட்டிகளில் 35 தங்கம், 25 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த வெற்றிகளால் தற்போது வர்ஷா 6 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணியில் இடம் பிடித்துள்ளார். வர்ஷா, மதுரை லேடிடோக் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரது தந்தை கணேஷ், ஆரம்ப காலத்தில் மதுரை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருந்துள்ளார். 6-ம் வகுப்பு படிக்கும் போதே வர்ஷா துப்பாக்கியை பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

மகளின் ஆர்வத்தை பார்த்த கணேஷ், அவரை உடனே ரைபிள் கிளப்பில் உறுப்பினராக சேர்த்துள் ளார். ஒரு மாத பயிற்சியிலேயே சென்னையில் 2008-ல் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் வர்ஷா.
அன்று முதல் இன்று வரை இந்தியா முழுவதும் நடைபெறம் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு மகளை அழைத்து சென்று வருகிறார்.

கடந்த 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மதுரை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான 50 மீட்டர் ப்ரோன், த்ரீ பொஷிசன் துப்பாக்கி சுடும் போட்டிகளில் ஒரு தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களையும், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார் வர்ஷா.

இதுகுறித்து வர்ஷா கூறிய தாவது: தென்னிந்திய துப்பாக்கி சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் பெற்றதை, என்னுடைய சிறந்த போட்டியாகக் கருதுகிறேன். 

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில், பங்கேற்று தங்கம் வெல்வதே எனது இலக்கு. சர்வதேச தரத்தில் மைதானம் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. 

வெளிநாடுகளில் இருக்கும் எலக்ட்ரானிக் மைதானங் களில் ஸ்கோர் போர்டு திரைகள் அருகிலேயே இருக்கும். ஆனால், தமிழக மைதானத்தில் ஸ்கோரை பார்க்க சில நிமிடங்கள் ஆகிறது. 
அதனால், இலக்கை சுடுவதில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. சர்வதே தரத்தில் பயிற்சியாளர்களும் இல்லை. சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் கிடைக்கும். 

அதுவரை, நாம் சொந்த செலவி லேயே போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனக்காக என்னுடைய தந்தை சொத்துகளை விற்று செலவு செய்கிறார்.

என்னுடைய ஒவ்வாரு வெற்றியும் அந்த இழப்பை ஈடு செய்கிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்று என் தந்தைக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.
Tags:
Privacy and cookie settings