அதிமுகவின் நலன் கருதி எம்.எல்.ஏ.க்கள் முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்காலிக மனக் கசப்பை மறந்து
அனைவரும் ஒற்றுமை யுடன் செயல்படுவோம் எனவும் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டு ள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவா ளிகள் என்றும் அவர்களுக்கான 4 ஆண்டு சிறைத் தண்டனை யையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இன்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அந்த அறிக் கையில், தற்போதுள்ள சூழலில் கட்சிக்கு எது நல்லதோ அதை எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டும்.
அதிமுகவின் நலன் கருதி எம்.எல்.ஏக்கள் முடிவெடுக்க வேண்டும். தற்காலிக மனக்கசப்பை மறந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.
ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடருவோம். ஜெயலலலிதா நல்லாட்சி தொடரவே மக்கள் வாக்களித் தானர். எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் ஒன்றுபட்டு கட்சிக்கு ஊறு நேராமல் காக்க வேண்டும். அதிமுக பிளவு படுவதை எதிரிகள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.
அதிமுகவினர், மக்கள் விருப்பம் அனைவ ருக்கும் தெரியும். ஜெயலலிதா வின் விருப்பத்துக்கு மதிப்பளித்து அவரது வழியில் செல்வது தான் எம்.எல்.ஏக் களின் கடமை என வேண்டுகோள் விடுத் துள்ளார் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்.