அமெரிக்கா வில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ட்ரம்ப் புதிய கட்டுப் பாடுகள் விதித்ததையடுத்து வெளி நாடுகளில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களை நாடு திரும்புமாறு கூகுள் உத்தர விட்டுள்ளது.
அமெரிக்கா வில் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுக்கும் விதமாக, இஸ்லாமி யர்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் 7 நாடுகளில் இருந்து
அகதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ட்ரம்ப் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளார்.
இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கடும் கண்டனம் தெரிவித்து ள்ளார்.
இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நிறுவன ங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பாதிக்கப் படுவார்கள் என அவர் தெரிவித் துள்ளார்.
ட்ரம்பின் இந்த புதிய உத்தரவு நடை முறைக்கு வருவதற்குள், வெளி நாடுகளில் உள்ள கூகுள் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் நாடுதிரும்ப வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கேட்டுக் கொண்டுள்ளார்.