இந்த ஆளுநர் தான் எங்களுக்கு வேணும்... மன்சூர் அலிகான் !

மன்சூர் அலிகான் எதையும் மனசில் வைத்துக் கொள்ளாமல் பேசி விடுவார். செல்லாத நோட்டு பிரச்சனையின் போது பிரதமர் மோடியை எதிர்த்து பேசியவர் மன்சூர். 
இந்த ஆளுநர் தான் எங்களுக்கு வேணும்... மன்சூர் அலிகான் !
அதே போல், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, தான் ஒரு நடிகர் என்பதை எல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல், 

இரங்கி மாணவர் களோடு மாணவராக போராட்ட களத்தில் பல நாட்கள் தொடர்நயது இருந்தார் மன்சூர்.

இப்போது அரசியல் சூழல் படுசூடாக இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ்சுக்கு தன் ஆதரவை தர அவரது இல்லம் நோக்கி சென்ற போது பத்திரிகை யாளர்களை சந்தித்து பேசினார் மன்சூர்.
ஆளுநரின் செயல் பாடுகள் திருப்தி அளிக்கின்றன. அவரே நிரந்தர ஆளுநராக தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். 

மறைந்த முதல்வர் அமைத்த அமைச்சரவை பிளவு படாமல் ஓபிஎஸ் தலைமையில் சேர்ந்து இயங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings