இனி அண்ணன் தம்பிக்கெல்லாம் க்ரீன் கார்டு இல்லை... ட்ரம்ப் !

அமெரிக்காவில் வந்து தங்குவதற்கு, அண்ணன் தம்பி உள்ளிட்ட சொந்த பந்தங்களுக்கு க்ரீன் கார்டு கொடுக்கக் கூடாது என்ற சட்ட வரைவு மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இனி அண்ணன் தம்பிக்கெல்லாம் க்ரீன் கார்டு இல்லை... ட்ரம்ப் !
குடியரசுக் கட்சியைச் சார்ந்த அர்கான்சா செனட்டர் டாம் காட்டன் மற்றும் ஜார்ஜியா செனட்டர் டேவிட் பெர்டுயு, இந்த புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.

தொழிலாளர்கள் வேலை போச்சே!

இது வரையிலும் சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்கல் பற்றிய விவாதங்களும், தீர்வுக்க்கான வழிமுறைகளும் தான் அதிமாக பேசப்பட்டு வந்தது. 

இப்போது முதன் முறையாக சட்ட பூர்வமாக குடியேற்றா விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது.
அதற்கு வடிவம் கொடுத்துள்ள காட்டன் மற்றும் பெர்டுயு, அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்காக இந்த சீர்திருத்தம் அவசியம்.

தற்போது, அமெரிக்க குடிமக்கள் மற்றும் க்ரீன்கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் 21 வயதுக் குட்பட்ட குழந்தைகளிக்கு க்ரீன் கார்டு விண்ணப்பிக்க முடியும்.

மற்றும் மனைவி, குழந்தைகள், பெற்றோருக்கும் அனுமதி உண்டு. புதிய சட்ட மசோதாப்படி, சகோதர சகோதரிகளுக்கு க்ரீன்கார்டு விண்ணப்பிக்க முடியாது.

மனைவி/கணவன், 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே க்ரீன்கார்டு வழங்கப்பட வேண்டும் என்று இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது,
விதிவிலக்காக பெற்றோர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதுவும் அவர்கள் அமெரிக்காவில் வேலை பார்க்க முடியாது. 

பெற்றோர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் க்ரீன் கார்டு வழங்கப்படும்.

மேலும் அகதிகள் விசா 50 ஆயிரமாக குறைக்கப்படும். லாட்டரி மூலம் வழங்கப்படும் 50, ஆயிரம் க்ரீன் கார்டுகளுக்கும் தடை விதிக்கப்படும்.

இந்த நடவடிக்கை மூலம், அமெரிக்க தொழிலா ளர்களின் வேலைக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று மசோதாவில் கூறப் பட்டுள்ளது. 

ட்ரம்ப் அலுவல கத்தின் ஒப்புதலுடன் இந்த மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ள தாகவும் கூறி உள்ளனர்.
'முதலில் அமெரிக்கர்கள்' என்ற ட்ரம்பின் முழக்கம் அமெரிக்கத் தொழிலா ளர்கள் வேலை உத்தரவாதம் முதலில் என்று தான் பொருள் கொள்ளப் படுகிறது.

அதற்கேற்றார் போல், வெளி நாட்டு தொழிற் சாலைகளை அமெரிக்காவுக்கு திருப்பும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிந்தத ஒன்றாகும்.

ஐடி உள்ளிட்ட உயர் தொழில் நுட்ப வேலை வாய்ப்புப் பிரிவில் , க்ரீன் கார்டு எண்ணிக்கை குறைக் கப்பட வில்லை என்பது ஆறுதலான விஷயமாகும்.

அமெரிக்காவுக்கு க்ரீன்கார்டு வாங்கி செல்ல விரும்பும் உறவினர் களுக்கு பேரிடியாகும். அடுத்த நாட்டுக் காரர்கள் வருவதை எல்லா வழியிலும் ட்ரம்ப் அடைத்து விடுவார் போலிருக்கே!
Tags:
Privacy and cookie settings