திரையுலகில் பெருகும் எதிர்ப்பு... கமல் ஆவேச பேட்டி !

சசிகலாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
திரையுலகில் பெருகும் எதிர்ப்பு... கமல் ஆவேச பேட்டி !
இந்நிலையில், இந்தியா டுடேவுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது. ஆனால் தற்போதைய நிலையில் நான் முதல்வரை ஆதரிக்க விரும்புகிறேன். 

காரணம், அரசியலில் அவர் தனது திறமையை நிரூபித்துள்ளார். சசிகலாவின் திறமை குறித்து எனக்குத் தெரியாது. அவர் எதையும் செய்ததாக தெரியவில்லை. 

மறைந்த முதல்வருடன் இருந்துள்ளார். அதுவே அரசியல் தகுதியாகுமா என்று எனக்குத் தெரியவில்லை
முதல்வர் பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று கூற முடியாதவர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.

சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. திறமையாளர் என்று கமல் கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கமல்ஹாசனின் பகிரங்க பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings