கேரள மாநிலம், திருவனந்த புரத்தில் பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை சீண்டிய காட்சியை பாதிக்கப்பட்ட இளைஞர்
ஃபேஸ்புக் லைவ்ஸ்ட்ரீ மிங்கில் ஓடவிட்ட வீடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க் கிழமை காலை 11 மணியளவில் விஷ்ணு விச்சு மற்றும் ஆர்த்தி ஆகியோர் திருவனந் தபுரத்தில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து பேசி கொண்டு இருந்திருக் கிறார்கள்.
அப்போது அங்கே வந்த 2 மகளிர் காவல் அதிகாரிகள், இருவரையும் காவல் நிலையம் வருமாறு மிரட்டி யுள்ளனர். எதற்காக வரவேண்டும் என்று விஷ்ணு கேள்வி எழுப்பி யுள்ளார்.
அதற்கு பொது இடத்தில் ஆபாசமாக நடந்துக் கொண்டதால் இருவரும் வர வேண்டும் என மிரட்டியதுடன் மற்ற இரண்டு ஆண் காவலர்களின் உதவியுடன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் வைத்து காதலர்களை மிரட்டியி ருக்கிறார்கள். பின்னர் இருவரும் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் துன்புறுத்தி யுள்ளனர்.
காவல் துறையினரின் அத்துமீறலை சகிக்க முடியாத விஷ்ணு தனது செல்போனில் இருந்து இந்த காட்சிகளை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து, காவலர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித் துள்ளார்.
இந்த வீடியோ பகிரப்பட்டதை யடுத்து பல்வேறு குழுவினரும் காவல் துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப் படுகிறது.
இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள விருக்கிறோம். ஆகையால் இந்தச் சம்பவம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல என அப்பெண் கூறி யுள்ளார்.
இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், உரிய புகார் பெறப்பட்ட பின்னர் தான் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து ள்ளனர்.
இது மிகவும் கலாச்சாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் காவலர்கள் வேண்டு மென்றே இது போன்ற நடவடிக் கைகளில் ஈடுப் பட்டிருக்க மாட்டார்கள் என்று கூறியு ள்ளார்.