குடிபோதையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஓதவ் காவல்துறை சப்- இன்ஸ்பெக்டரை அப்பெண் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
தக்கர்நகரில் சாலையோரம் காய்கறிக் கடை வைத்திருக்கும் அப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த காவலரை கன்னத்தில் அறைந்து,
சீருடையில் இருந்த அவரை தரதரவென இழுத்து அடித்ததை அங்கிருந்த பொது மக்கள் அப்பெண்ணை ஊக்குவித்தனர்.
குடிபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த காவலரை அப்பெண் தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் பரவியதை யடுத்து, சப்- இன்ஸ் பெக்டர் அம்ரித்ஜி கதுஜி என்பவர் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத் துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அம்ரித்ஜியை பாபுநகர் காவல் துறையினர் கைது செய்து, குடிபோதை யில் தடையை மீறிய குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
அம்ரித்ஜி உடனடியாக பணி இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். தற்போது அவரை அடித்த பெண்ணை தேடி வருவ தாகவும், அவர் அளிக்கும் புகாரின் அடிப்படையில்,
காவலர் மீது பாலியல் தொடர்பான வழக்குப் பதிவு செய்ய விருப்பதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித் துள்ளார்.
ராஜேந்திர பூங்கா புறவழிச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீராக்க சப்-இன்ஸ்பெக்டர் அம்ரித்ஜி அங்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
அளவுக்கு அதிகமாக குடித்திருந்த காவலர் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணை சீண்டி அவரிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித் துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அப்பெண், காவலர் என்றும் பாராமல் சட்டையை பிடித்து கீழே தள்ளி, 7 முறை கன்னத்தில் விளாசி யுள்ளார்.
அவரது பேன்ட்டை உருவி இந்த சம்பவம் சுமார் 20 நிமிடங்களுக்கு வீடியோவில் பதிவாகி யிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காவல்துறைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக சப்-இன்ஸ்பெக்டர் நடந்துக் கொண்டார் என கூடுதல் காவல் ஆணையர் வகிலா கூறியுள்ளார்.
இதே போன்று கடந்த 2015ஆம் ஆண்டு மணிநகர் காவல்துறை அதிகாரி ஒருவர் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட வீடியோ வெளியாகி அவர் கைது செய்யப்ப ட்டு பின் இடைநீக்கம் செய்யப் பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.