சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்ற வாளிகள்; இவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சரியே என உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு
வரலாற்றுச் சிறப்பு மிக்கது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்தார்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், அமித்வாராய் ஆகியோர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு
பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். அத்துடன் 3 பேருக்கும் விதிக்கப் பட்ட ரூ10 கோடி அபராத த்தையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சொத்து குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகாலம் கழித்து தற்போது நீதி நிலை நாட்டப் பட்டுள்ளது.
ஊழல் செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. பொது வாழ்க்கையில் இருப்போருக்கு உச்ச நீதிமன்ற த்தின் தீர்ப்பு நல்ல பாடமாக இருக்கும்.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி விட்ட நிலையில் இனி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் உடனே நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.