செவ்வாய் கிரகத்தில் நகர மொன்றை அமைப்பதற்கு சுமார் 100 வருட திட்ட மொன்று உருவாக் கப்பட்டுள்ள தாகவும், குறித்த திட்டமானது 2117ஆம் ஆண்டு நடை முறைக்கு வருமென ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித் துள்ளது.
குறித்த திட்டம் குறித்து அந்நாட்டு துணை ஜனாதிபதி ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் இணைந்து வெளியி ட்டுள்ள அறிக்கை யில்,
2117 ஆம் ஆண்டு செவ்வாயில் முதலாவது நகரத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் திட்ட மிட்டுள்ள தாக தெரிவித் துள்ளனர்.
அத்தோடு பூமியில் வசிக்கும் மக்களை அனைத்து வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்து வதற்கான, நகரமைப்பு திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியி டப்பட்டு ள்ளது.
மேலும் பூமிக்கு அடுத்த படியாக, மனிதர்கள் வாழ ஏற்புடைய தன்மைகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கண்டறி யப்பட் டுள்ளது.
அத்தோடு கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 செல்சியஸ் பாகை என்றும், அது ஒரு முறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் எடுக்குமென தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் பூமியி லிருந்து 2021 ஆம் ஆண்டளவில் மனிதர்கள் சென்று ஆய்வு நடத்த உள்ளார்கள்.
குறித்த ஆய்விற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சார்பிலும், ஒரு விண்கலம் உருவாக்கப் பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது .