ஹைட்ரோ கார்பன் போராட்டம் வலுவடைகிறது !

0 minute read
புதுகை நீதிமன்ற வழக்கறிஞர்கள் ‘ஹைட்ரோ கார்பன்’ இயற்கை வாயு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொண் டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் போராட்டம் வலுவடைகிறது !
மேலும் நாளைய தினம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடத்தில் மீத்தேன், இயற்கை வாயு எனும் பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மக்களின் வாழ்வுரிமை யைக் கேள்விக் குள்ளாக்கும். 

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் மக்கள் விரோதச் செயல்களுக்கு எதிரான கோரிக்கை மனுவினையும் வழங்க இருக்கின்றனர்.

மக்கள் போராட்டத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் முகமாக வழக்கறிஞர்க ளை இணைக்கும் பணியை வழக்கறிஞர் போத்தியப்பன் குழுவினர் செய்து வருகின்றனர். 

தற்போது ஐடி இளைஞா்கள் உடன் பொதுக்கள், வக்கீல்கள் போராட்டத்தில் இணைந் துள்ளனா்.
Tags:
Privacy and cookie settings