நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்... விஜய் மல்லையா !

தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி பந்தை உதைப்பதை போல் தன்னை உதைப் பதாகவும் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.
நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்... விஜய் மல்லையா !
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமை யாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்த வில்லை.

வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்று விட்டர். 

அவரை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

ஆனால் அவரோ வெளிநாட்டில் இருந்தபடி தன் மீதான வழக்கு விவரங்களை கவனித்து வருகிறார். அவ்வப் போது தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார் மல்லையா.

இந்த நிலையில் மல்லையா தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி உதைப்பதாகவும் கூறி யுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை மற்றும் அவரை பிரிட்டனில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கு மேற்கொள் ளப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லையா, எனக்கு எதிராக ஊடகங்கள் பயன் படுத்தப் படுகின்றன.

நான் ஒரு கால்பந்து. தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் என்னை வைத்து விளையா டுகின்றன. 

துரதிர்ஷ்டவசமாக இந்த விளை யாட்டில் நடுவர்கள் இல்லை என்றும் மல்லையா குறிப்பிட் டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings