திமுக என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல.,ஃப்ராடு என்று புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி.
தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனிச்சாமியா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்நிலையில் சுப்ரமணியன் சாமி அவ்வப் போது புதுப்புது குண்டுகளை வீசி வருகிறார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சாமி கூறும்போது, திமுக என்றால் “ தில் முல் கூட்டாளி..”, அதாவது ஃபிராடு என்று குறிப்பிட் டுள்ளார்.
அவர் எதற்காக இவ்வாறு தெரிவித்தார் என்ற காரணத்தை பதிவிட வில்லை.