மொபைல் திருட்டு சம்பவத்தில், உண்மையை நிரூபிக்க சிறுவர்களை கொதிக்கும் எண்ணெயில் கைவிட வைத்ததால், 3 பேர் படுகாய மடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் நர்சிங்பதா கிராமத்தைச் சேர்ந்த சஹான் லால் வரியவ் என்பவரின் 13 வயது மகனின் செல்போன் திடீரென காணாமல் போனது.
இதனை யடுத்து தனது மகனின் 5 நண்பர் களிடம் வரியவ் விசாரித்தப் போது, அவர்கள் யாரும் செல்போனை எடுக்க வில்லை என்று கூறினர். இருப்பினும் உண்மையை கண்டறிய வரியவ், ஒரு விபரீத முயற்சியில் ஈடுபட்டார்.
கொதிக்கும் எண்ணெயில் சிறுவர்களை கைவிட சொன்னால், உண்மை தெரிந்து விடும் என்று முடிவு செய்து சிறுவர்கள் 5 பேரையும் வீட்டிற்கு அழைத் துள்ளார். அங்கு கொதிக்கும் எண்ணெயில் அவர்களை கைவிட கூறி யுள்ளார்.
அவர்கள் செல்போனை எடுக்க வில்லை என்று எடுத்து ரைத்தும் வரியவ் ஏற்று கொள்ள வில்லை. பின்னர் சிறுவர்களை கட்டாயப் படுத்தி, அவர்களை கொதிக்கும் எண்ணெயில் கைகளை விட வைத்துள்ளார்.
இதில் சிறுவர்கள் வலியால் துடித்ததில், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு மருத்துவ மனையில் அனுமதி த்தனர்.
இது தொடர்பாக, காவல் துறையில் அளிக்கப் பட்ட புகாரின் பேரில், வரியவ் கைது செய்யப் பட்டார்.