மாடுகளை நண்பர்களுக்கு கொடுத்த ஓ.பி.எஸ் !

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப் பட்டதால் ஓ.பி.எஸ் வசித்து வந்த முதலமைச்சருக்கான அரசு இல்லத்தை காலி செய்ய சொல்லி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. 
மாடுகளை நண்பர்களுக்கு கொடுத்த ஓ.பி.எஸ் !
இதனால் அவர் வளர்த்து வந்த பாரம்பரிய மாடுகளை நண்பர்களிடம் கொடுத்து விட்டதாக கூறப் படுகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திடம் மனு கொடுக்க சென்ற போது 

அவரது வீட்டில் உள்ள மாட்டு தொழுவ த்தையும், பாரம்பரிய மாடுகளையும் மாணவர்களுக்கு காட்டியுள்ளார்.

பாரம்பரிய நாட்டு மாடுகளை பார்வையிடச் சென்ற மாணவர்களிடம், தொழுவத்திற்கு செல்லும் போது காலில் செருப்பை மாட்டிக் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மாணவர்களிடம் பன்னீர் செல்வம் பேசும் போது, மாணவர்கள் நீங்கள் பாரம்பரிய மாடுகள் பற்றி சமூக வலை தளத்தில் எழுதி வருகிறீர்கள். 

ஆனால் நான் மாட்டோடு தான் இந்த இல்லத்தில் வாழ்ந்து வருகிறேன் எனவும் அவர் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது.
ஆனால் இப்பொழுது முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்ததால், முதலமைச்சருக்கான அரசு இல்லத்தை காலி செய்ய சொல்லி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அதனால் ஓ. பன்னீர் செல்வம் வளர்த்து வந்த பாரம்பரிய நாட்டு மாடுகளை, தன்னுடை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர் களிடம் பன்னீர் செல்வம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளீயாகி யுள்ளன.
Tags:
Privacy and cookie settings