யாஹூ மெயில் தளத்தில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா! இனிமேல் உங்களுக்கான பாஸ்வேர்டை நீங்கள் நினைவில் கொள்ளத் தேவையில்லை.
நீங்கள் நினைவில் வைத்து தடுமாறும் பழக்கமே உங்களுக்குத் தேவையில்லை. யாஹூ அனுப்பும் பாஸ்வேர்ட் டெக்ஸ்ட் பைலுடன் உங்கள் போனுக்கு அனுப்பப்படும்.
அந்த பாஸ்வேர்ட் அப்போதைய பயன் பாட்டிற்கு மட்டுமே. அடுத்த முறை அஞ்சல் படிக்க முற்படுகையில், அந்த சமயத்தி ற்கான பாஸ்வேர்ட் அதே முறையில் வழங்கப்படும்.
இவ்வாறு ஒவ்வொரு வேளைக்கும் பாஸ்வேர்ட் வாங்கிட முதலில் செட் செய்திட வேண்டும். இதற்கு முதலில், யாஹூ மெயில் அக்கவுண்ட் தளத்திற்குச் செல்லவும்.
அங்கு மேல் வலது மூலையில் உள்ள உங்கள் பெயர் மீதும் பின்னர் உங்கள் அக்கவுண்ட் மீதும் கிளிக் செய்திடவும்.
On-demand passwords என்பதன் கீழாக, Get started என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக ஒரு விண்டோ காட்டப்படும்.
இங்கு உங்கள் போன் எண்ணை இதில் இட வேண்டும். உடன் இந்த சேவையைச் சோதனை செய்திடும் வகையில், செய்தி ஒன்று உங்கள் தொலை பேசிக்கு அனுப்பப்படும்.
அதில் உள்ள Send SMS என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பின்னர் நீங்கள் பாஸ் வேர்டாகப் பயன்படுத்த ஒரு குறியீடும் அது சார்ந்த செய்தி டெக்ஸ் ட்டாகவும் அனுப்பப்படும்.
on-demand passwords சேவை உங்களுக்குத் தொடங்கி விட்டது என்ற செய்தியும் கிடைக்கும். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை யாஹூ மெயில் செல்லும் போதும், உங்கள் யூசர் நேம் கொடுத்தவுடன், உங்கள் போனுக்கு, பாஸ்வேர்ட் ஒன்றை, யாஹூ சர்வர் அனுப்பும்.
இந்த சேவை உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது தேவை இல்லை என்றால், Account security பகுதிக்குச் சென்று, On-demand என்பதற்கு அருகில் உள்ள ஸ்விட்சை off நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
அதன் பின்னர், மீண்டும் முன்பு போல, நீங்கள் செட் செய்த முந்தைய பாஸ்வேர்டை நினைவில் கொண்டு இயக்கலாம்.