செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம்,
உண்மை நிலையை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம். அதிமுக பொதுச் செயலாளராக வேண்டியவர் மதுசூதனன். கபட நாடகத்தை நிறைவேற்ற அமைச்சர்களை சசிகலா தூண்டி விட்டார்.
கட்சி, ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் தந்தவர் சசிகலா. அரசியலில் பங்கேற்க மாட்டேன் என கடிதத்தில் உறுதியளித்திருந்தார்.
உதவியாக இருப்பதாக கூறி மீண்டும் வந்தார் சசிகலா. ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றி குடும்பச் சொத்தாக மாற்ற சசிகலா நினைக்கிறார்.
யார் நாடக மாடினார்கள், யார் துரோகம் செய்தார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார். கபட நாடகத்தை நிறைவேற்ற அமைச்சர்களை சசிகலா தூண்டி விட்டார்.
செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட நேரிடும்.போயஸ் கார்டனுக்கு உறவினர்களை அழைத்து வந்து துரோகம் செய்தவர் சசிகலா.
ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். போயஸ் கார்டன் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற கூறினார்.