அதனால் தான், ஜெயலலிதா கடந்த பல வருடங்களுக்கு முன்னரே உயில் எழுதி வைத்து விட்டார். அந்த உயில் பத்திரிக்கை யாளா் சோ. ராமசாமியிடம் இருந்தது.
அவா் உடல் நலக்குறை வால் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அப்போது அந்த உயில் ஆடிட்டா் குருமூர்த்தியிடம் கொடுக்கப் பட்டது.
அவரும் சசியின் கூட்டத்தின் ஆட்டத்திற்கு பயந்து பிரதமா் மோடியிடம் ஒப்படைத் ததாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளான நாளை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிலா் அந்த உயிலை பத்திரிக்கை யாளா்கள் முன்னிலையில் டெல்லியில் வெளி யிடலாம் என்றும் கூறப் படுகிறது.
அப்படி உயில் வெளியே வரும் பட்சத்தில் போயஸ் கார்டன், கொடாநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதா வின் பல சொத்துக்கள், அவரது அண்ணன் மகன்தீபக், மற்றும் தீபாவிடம் வந்து சேர உள்ளது.
அண்ணா திமுகவினரின் புனிதஸ் தலமாக பார்க்கப்படும் இடம் போயஸ் கார்டன்.
அந்த புனிதஸ்தலம் தீபா மற்றும் தீபக்கிற்கு கைமாறும் போது அதில் இருந்து சசி மற்றும் அவரது குடும்பத்தினா் தாங்களாகவே வெளியேறு வார்கள்.
அப்போது முதல் அதிமுக தலைமையும் மாறும், தொண்டா்கள் விரும்பியபடி கட்சியும், ஆட்சியும் சசிகலா கையில் இருந்து பறிக்கப்பட உள்ளது.
இதன் அச்சாரமாகதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஒரு தனியார் தொலைகாட்சிக்கு தொலைபேசியின் வாயிலாக திடுக்கிடும் பேட்டி அளித்தார்.
அதில் பல கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து பேசிய தீபக் , போயஸ் கார்டனை பற்றி தன் கருத்தை அதிரடியாக கூறினார்.
நாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் அதிமுக கட்சியினரிடையே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போயஸ் கார்டன் எனக்கும் , தீபாவுக்கும் தான் சொந்தம் என, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித் துள்ளார்.
அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 1௦௦ கோடி ரூபாய் அபராத தொகையை ,தீபக்கே தனி மனிதனாக கட்ட உள்ளதாகவும் அதன் பின், போயஸ் கார்டன் தனக்கும் தீபாவுக்கும் தான் சொந்தம் என குறிபிட் டுள்ளார் .
தீபக்கால் அன்பாக சசிகலா ஆண்டி என அழைக்கப் படும் சசிகலா தற்போது , பெங்களூரு அக்ரஹாரா சிறையில் உள்ள இந்நேரத்தில் தீபக் இவ்வாறு கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனால் சசியின் கூட்டம் ஆட்டம் கண்டு உள்ளது. சசிக்கு ஜெயிலில் திக், திக் என்று இருப்பதாக கூறு கின்றனா்.