தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து முன்னாள் ஆளுநர் ரோசய்யா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், பன்னீர் செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்றும், சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை செய்த பின்னரே ஆளுநர் முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு பன்னீர் செல்வம் உண்மையாக நடந்து கொண்டவர் என்றும் ஆளுநர் ரோசய்யா கூறினார்.
முன்னதாக, பன்னீர் செல்வத்தால் தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்ற கருத்தினை முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி நேற்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.