விஜய் நடிக்கும் படத்திலிருந்து ஜோதிகா விலகல் !

ஜோதிகா, விஜய் படத்தில் நடிக்க கமிட் ஆனதற்கு மாமனார் நடிகர் சிவகுமார் கோபப்பட்டு பேசாமல் இருந்தார் அல்லவா? அதனால், வேறு வழியின்றி ஜோதிகா, அட்லீ இயக்க விஜய் நடிக்கும் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
விஜய் நடிக்கும் படத்திலிருந்து ஜோதிகா விலகல் !
அவருக்கு உடை முதற்கொண்டு ரெடியாகி,2 மாதங்களாக இந்த படத்தின் வேலைகள் நடந்துகொண்டு உள்ளதாம். இதனால், படம் தொடங்கும் முதல்நாள் விலகுகிறேன் என்று சொன்னதை கேட்டு படக்குழு அதிர்ந்து போய் விட்டதாம். 
இப்போது வேறு ஒரு முன்னணி நடிகையிடம் கேட்டுக்கொண்டு உள்ளார்கள். அந்த மார்க்கண்டேய நடிகர் வீட்டு பையனை சரியாக வளைத்து பிடித்து கெட்டி காரத்தனமாக செட்டில் ஆனார் பிரகாச நடிகை. 

கல்யாணத்திற்கு படாத பாடு பட்டு மகன் சன் நடிகர் அப்பாகிட்டே ஓகே வாங்கினார். சரி, போகட்டும் என்று அவரும் ஓகே பண்ணி, இப்போ இரண்டு பிள்ளைகள். 

சன் நடிகர் புத்திசாலின்னு நினைக்கும் அப்பாவி. அதனால் அவரை அழகாய் செட்டில் பண்ணும் போதே மனைவி, நடிக்க ஆசை வந்தால் நடிப்பேன் என்று சம்மதம் வாங்கி வைத்துள்ளார். 
பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், நடிப்பு ஆசை வந்தது. சொந்த ப்ரொடக்ஷனில் ஹீரோயின் ஓரியண்டட் படமாகத் தான் நடிக்க போறார்ன்னு வயசு படம் நடித்தார். 
பேலியோ அவியல் செய்வது எப்படி?
இப்போ கேர்ள்ஸ் படத்தில் நடிக்கிறார். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. இப்போ விஜய் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கமிட் ஆனதும், மாமனார் நடிகருக்கு சுத்தமாக பிடிக்க வில்லையாம்.

சன் நடிகர் தான் மனைவி என்ன சொன்னாலும் கேப்பாரே, அவர்கிட்ட சொல்லியும் பயன் இல்லாமல், மாமனார், மருமகள் இடையே மனஸ்தாபம். பேச்சு வார்த்தை இல்லயாம்.
Tags:
Privacy and cookie settings