பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் உள்பட பெரிய ஸ்டார்களின் பல படங்கள் விநியோகிஸ் தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்த தாகவும்,
ஆனால் அந்த படங்கள் 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் ஓடியதாக பொய்யான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்ப தாகவும் பேசினார்.
பழுத்த அனுபவம் உள்ள ஒரு விநியோகிஸ்தரே இவ்வாறு பேசியது திரையுல கினர்களை அதிர வைத்தது. வெள்ளிக் கிழமை ரிலீஸ் ஆகும் படம் திங்கட் கிழமைக்குள் ரூ.100 கோடி வசூல் செய்திருப்ப தாக
ஒரு சில படங்களுக்கு விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் 'கபாலி' படத்தை மதுரையில் ரிலீஸ் செய்த இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் கருத்தை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன். 'கபாலி' படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள்
இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார். 'கபாலி' படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு.
நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் சற்று களங்கப் படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் தான், நானும் ஒரு வினியோகஸ்தர்,
திரையரங்கு உரிமையாளர். லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்ட சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது
எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி யிருக்கு. 'கபாலி' படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் 'கபாலி'தான்," என்று கூறி யுள்ளார்.