ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை பெங்களூரில் நடத்தியதால் கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடிக்கும் மேல் செலவாகி யுள்ளது.
20 வருடங்களு க்கும் மேலாக குற்றவாளிகள் தரப்பால் இழுத் தடிக்கப் பட்ட இந்த வழக்கு 2003ல் பெங்களூர் நீதிமன்ற த்திற்கு மாற்றப் பட்டது.
தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயமாக இருக்க வாய்ப் பில்லை என்பதால் பெங்களூருக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டிருந்தது.
இதன் பிறகு கர்நாடக அரசுதான் வழக்கு செலவீனங்களை ஏற்க வேண்டிய தாயிற்று. கோர்ட் ஹால் அமைப்பது, மொழி பெயர்ப்பாளர் களுக்கு சம்பளம்,
நீதிபதிகளு க்கான சம்பளம், வழக்கறிஞர்கள் சம்பளம் என பல வகைகளிலும் இந்த வழக்கால் கர்நாடகா வுக்கு செலவீனம் அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நிலவரப்படி, ரூ.5 கோடிவரை செலவாகியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற அப்பீல் விசாரணையின் போது செலவீனம் மேலும் கூடியுள்ள தாம்.
இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், செலவீனங் களை கணக்கிட்டு வருகிறோம். விரைவில் இதற்கான தொகையை தமிழகத்திடம் கேட்டு பெறுவோம் என்றார்.