குவைத் இளவ ரசர்களில் ஒருவரான ஷேக் பைசல் அல் அப்துல்லாஹ் அல் சபா தனது உறவினரான இளவரசர் ஷேக் பாஸில் சாலிம் சபா அல் சாலிம் அல் சபா என்பவரை 2010 ஆம் ஆண்டு
சுட்டுக் கொன்ற வழக்கில் 2013 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப் பட்டது. மேல்முறையீ டுகளுக்குப் பின் இன்று தூக்கு தண்டனை நிறை வேற்றப் படவுள்ளது.
இளவரசர் ஷேக் பைசலுடன் சேர்த்து கொலை மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டது போன்ற வெவ்வேறு குற்றங்களில் தொடர்புடைய மொத்தம் 7 பேர் இன்று தூக்கி லிடப்ப டவுள்ளனர்.
இவர்களில் 3 பேர் தலா ஒருவர் என குவைத், எத்தியோப்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்ற 3 பேர் ஆண்கள், இவர்களில் 2 பேர் எகிப்தியர் ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர்.
இதில் குவைத் பெண்ணான நஜ்ரா அல் எனீஸி என்பவர் 2009 ஆம் ஆண்டு தனது கணவரின்
இரண்டாவது திருமணம் நடைபெற விருந்த கூடாரத்தை திட்டமிட்டு எரித்ததன் மூலம் பெண்கள், குழந்தைகள் என 57 பேரின் மரணத்திற்கு காரண மானதால் தூக்கு தண்டனை விதிக்க ப்பட்டவர்.