சட்ட சபைக்குள் தர்ணா : ஸ்டாலின் வெளியேற்றம் | Lawyers congregation sit Stalin pullout !

அவைக்கு குந்தகம் விளை வித்தாக கூறி திமுக எம்எல்ஏ க்களை வெளியேற்று மாறு சபாநாயகர் உத்தர விட்டார். ஆனால் சட்ட சபையில் இருந்து 


வெளியேற மறுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்ற போது அதை திமுகவினர் தடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். 

மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளு முள்ளுவிற்கு உள்ளானார். இதனை யடுத்து அவை 1 மணிவரை ஒத்தி வைக்கப் பட்டது.

அவை மீண்டும் கூடிய உடன் தனபால் தனக்கு நேர்ந்த துன்பத்தைக் கூறி வேதனை யுடன் பேசினார்.

திமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபடவே அவர்களை வெளியேற் றுமாறு சபாநாயகர் தனபால் உத்தர விட்டார். 

சட்ட சபையை 3 மணிவரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால். இரண்டாவது முறையாக சட்டசபை ஒத்தி வைக்கப் பட்டது. 

இதனைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் திமுக உறுப்பினர் களை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் பலரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் 20 எம்எல்ஏ க்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். 

ஆனால் அவையில் இருந்து வெளியேற மறுத்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏ க்கள் சட்ட சபையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை யடுத்து ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
Tags:
Privacy and cookie settings