போயஸ் கார்டனில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர் களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்துடன் தான் ஹோட்டலில் தங்கியுள்ளனர். எம்.எல்.ஏ. க்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட வில்லை.
சசிகலா தலைமையில் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க முறையிடுவோம். சசிகலாவுடன் பத்து மூத்த அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்கிறோம். பன்னீர் செல்வத்தை கட்டாயப் படுத்தி கையெழுத்து வாங்க வில்லை.
அவரை மீறி எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. மேலும், அவர் ஆதாரமின்றி குற்றச் சாட்டுகளை வைக்கிறார்' என்றார்.