நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித் துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித் துள்ளது
இது தவிர, 169 மதுபார்களும் மூடப்படும் என அறிவித் துள்ள தமிழக அரசு மாவட்ட வாரியாக அவற்றின் பட்டியலையும் வெளியிட் டுள்ளது.
அதன் படி சென்னை மண்டலத்தில் 105 டாஸ்மாக் கடைகள் 63 மதுபார்கள் மூடப்படு கின்றன.
கோயமுத்தூரில் 44 டாஸ்மாக் கடைகள், 20 பார்கள் மூடப்படு கின்றன.
சேலத்தில் சேலம் 133 டாஸ்மாக் கடைகள், 26 பார்கள் மூடப்படு கின்றன.
திருச்சியில் 119 டாஸ்மாக் கடைகள் 23 பார்களும், மதுரையில் 99 டாஸ்மாக் கடைகளும் 37 பார்களும் மூடப்படு கின்றன.
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் ஊழிய ர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத் திலேயே மாற்றுப்பணி வழங்கப் படும் எனவும் தமிழக அரசு தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், மேலும் 500 கடைகள் மூடப்படுவது குறிப்பிடத் தக்கது.
கடந்த 20 ஆம்தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மேலும் 500 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்படும் என அறிவித்து அதற்கான கோப்பிலும் கையெழுத் திட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.