இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழகம் தேடுவது என்ன?

1 minute read
எப்பயாவது ப்ரேக்கிங் நியூஸ்னா பரவாயில்ல, எப்பவுமே ப்ரேக்கிங் நியூஸ்ன்னா என்ன பண்ணுறது, 
இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழகம் தேடுவது என்ன?
2015 டிசம்பர்ல நியூஸ் சேனல் ஆன் பண்ணது இன்னும் மாத்த முடியலனு நேத்து தெறி காட்டிய மீம்ஸ்கள் சொல்லும் விஷயம் உண்மை தான். 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, ரூபாய் நோட்டுகள் செல்லாது, ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு, இப்போது தமிழக முதல்வர் யார் என்ற மோதல்.

இந்த பரபரப்புக்கு நடுவே நேற்று ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். 

அவர்கள் தான் நேற்றைய ட்ரெண்டிங்காக இருப்பார்கள் என்றால், இதெல்லாம் விஷயமா என தமிழகமே ஆன்லைனில் வேறு ஒரு விஷயத்தை தேடியுள்ளது.

அட ஆமாம் பாஸ், சிங்கம் 3 படத்தை தான் தமிழ்நாடு கூகுளில் அதிகமாக தேடியுள்ளது. சசிகலா தான் டாப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம்,

ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது தேடல் என்றால் அதனையும் பங்கு போடுகிறார், 
இந்திய கேப்டன் விராட் கோலி. நேற்றைய கோலியின் சதம் பற்றியும் அதிகம் தேடியுள்ளது தமிழகம்.

சிங்கம் படம் வெளியாவதற்கு முன்பே அது குறித்த நிறைய விவாதங்கள் ஆன்லைனில் ஹிட் அடித்தன. 

இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பைரஸி தளமான தமிழ் ராக்கர்ஸை தாக்கி பேசியது,

அதற்கு படத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்வோம் என அந்த தளம் பதில் தந்தது என ட்ரெண்டிங் கிலேயே இருந்தது சிங்கம் 3. 

படத்தின் விமர்சனம் என்னவாக இருந்தாலும் மக்களிடம் இந்த படம் வைரலாக ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழக அரசியல் நிலவரம் முன்பு இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருப்பதையும் தாண்டி மக்களின் தேடல் பொழுது போக்கில் அதிகமாக உள்ளது.

அதிலும் சிங்கம் 3 தொடர்பாக தேடப்பட்ட வார்த்தைகள் ”தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் சிங்கம் 3 படம்” என்பது தாம்.
”சர்வதேச போலீஸாக தமிழ்ராக்கர்ஸ் அட்மினை தேடி கைது செய்வார் சூர்யா. இதுதான் சிங்கம் 4 கதை” என்ற ட்வீட்டும் தெறி வைரல் ஆனது

துரைசிங்கம் வில்லனை ஆஸ்திரேலியா வில் தேட, ரசிகர்கள் துரைசிங்கத்தை கூகுளில் தேடியிருக் கிறார்கள்.
Tags:
Today | 26, March 2025
Privacy and cookie settings