சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ., க்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து அனைத்து எம்எல்ஏக் களுக்கும் உல்லாச ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு. அவர்கள் அங்கு தங்க வைக்கப் பட்டுள்ளனா்.
அவர்களுக்கு செம கவனிப்பு செய்வதற்கு சசிகலா உத்தர விட்டுள்ளார். அதன் படி அவர்கள் படு உற்சாகத்தில் உள்ளனா்.
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத போது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவரும் தனது பங்குக்கு ரூ.1 சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு அழைத்து வரப்பட்டபோதும் மன்னார்குடியினரால் கவனிப்பும் நடந்ததாம்.
இந்த நிலையில் தற்போது தங்க வைக்கப்பட்டு கவனிப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
அது போல ஒரு எம்எல்ஏவுக்கு ஒரு இன்ஸ்பெக்டா் வீதம் அவர்களை கண்காணிக்கும் பணியில் காவல் துறையும் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.