நான் தங்கச்சியா? கொதித்து எழுந்த நடிகை !

ரெஹானா என்று தற்போது தன் பெயரை மாற்றியுள்ள மனீஷாஜித், விந்தை, கமர்கட் போன்ற படங்களில் நடித்துள்ளார். 
இப்போது திமில், அப்பத்தாவை ஆட்டைய போட்டுட்டாங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

நினைத்த மாதிரி பெரிய அளவில் அவருக்கு படம் இல்லை என்றாலும், பெரிய படங்களில் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டர்களில் நடிக்க விருப்பமாக உள்ளார்.

இந்த சூழலில், செல்வா இயக்க அரவிந்த்சாமி -ரித்திகா சிங் நடிக்க இருக்கும் வணங்காமுடி படத்தில் ரித்திகா சிங்கின் தங்கையாக ஒரு கேரக்டர் இருக்கிறதாம்.

அதற்கு ரெஹானாவை கேட்க, இந்த மாதிரி கேரக்ட்டருக்கு நோ என்று முகத்தை திருப்பிக் கிட்டாராம்.
இன்னும் சில தினங்களில் ஷூட்டிங் தொடங்க போவதால், செம டென்ஷனில் தங்கை கேரக்டருக்கு ஆள் தேடிக்கொண்டு  இருக்கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings