கச்சா எண்ணெய் பாதித்த பகுதிக்கு மருத்துவ குழு தயார் !

சென்னை, எண்ணூர் துறைமுகம் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக் குள்ளாகி வெளியான கச்சா எண்ணெய் திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை வரை  படர்ந்திருந்தது.
கச்சா எண்ணெய் பாதித்த பகுதிக்கு மருத்துவ குழு தயார் !
இதனை அகற்றுவதற்கு மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், சென்னை துறைமுக ஊழியர்கள் என பல்வேறு அமைப்புகள் 1000க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கச்சா எண்ணெய் அகற்றும் போது நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் 4 நடமாடும் மருத்துவக் குழுக்களும் மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings