சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள், அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த் தலை பகுதியில், நேற்று இரவு நடை பெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப் பாளாக ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த வரான அமைச்சர் வளர்மதி, திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்தவரான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருவரும் பங்கேற்றனர்.
பறந்து வந்த கற்கள்
இந்த கூட்டத்தில், வெல்ல மண்டி நடராஜன் பேசும் போது, கூட்டத் திலிருந்து 3 கற்கள் வந்தன. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் அருகே வந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை யடுத்து அமைச் சர்களின் ஆதர வாளர்கள் கல் வந்த திசை நோக்கி ஓடிச் சென்றனர். ஆனால் வீசியது யார் என்பது தெரிய வில்லை.
சசிகலா தான்
இந்த கல் வீச்சில் யாரும் காயம் அடையவில்லை. இந்த பரபரப்புக்கு மத்தியில் வீரா வேசமானார் அமைச்சர் நடராஜன், எங்களை எப்படி மிரட்டினாலும், அதிமுக பொதுச்செயலர் சசிகலா தான் என அவர் முழங்கினார்.
இதை யடுத்து அவசரமாக பேச்சை முடித்து கிளம்பினார் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன்.
கூட்டம் இல்லை
இந்த பொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவான வர்களே வந்திருந்தனர். அவர்களில் முக்கால்வாசி பேர் பெண் களாகும்.
ஏனெனில், இலவசமாக சேலை கொடுக்கிறோம் என கூறி பெண்க ளுக்கு ஆசை காட்டி அழைத்து வந்துள்ள தாக கூறப் படுகிறது.
நிகழ்ச்சி ரத்து
முன்னதாக, சேம்பரசம் பேட்டை பகுதியில் பள்ளி குழந்தை களுக்கு சைக்கிள் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுகவினர்.
ஆனால் அந்த பகுதி மக்கள் கொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்த தால் இரு அமைச்சர் களும் அந்த நிகழ்ச்சி ரத்து செய்திருந் தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
தீபா பேரவை எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர், துவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சி யில் பங்கேற்க நேற்று சென்ற போது,
தீபா பேரவை ஒருங்கி ணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமை யில், 37 பேர் கறுப்பு சட்டை யுடன், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷ மிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.