மீன் வளத்துறை அமைச்சராக இதுவரை இருந்த அமைச்சர் ஜெயக்குமா ருக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்
அமைச்சர் பொறுப்பில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப் பட்டுள்ள தால் அவருடைய துறையை இதுவரை முதல்வரே ஏற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயகுமாரு க்கு நிதித்துறை வழங்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த நிதியாண்டி ற்கான தமிழக பட்ஜெட்டை ஜெயக்குமார் அவர்களே சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
நிதித்துறை தவிர தமிழக முதல்வர் பழனிசாமி வசம் இருந்த திட்டம், ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகளும் ஜெயக்குமார் வசம் கொடுக்கப் பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுனர் இந்த அறிவிப்பை வெளியிட் டுள்ளார்.