40 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப் படாததை கண்டித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கரை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை யிட்டனர்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க., பொதுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அங்கு முற்றுகை யிட்டனர். வேலுசாமி புரத்தில் கடந்த ஒரு மாதத் திற்கும் மேலாக கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.
குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் போலீசாருக்கு பொது மக்களு க்கும் இடையே அரை மணி நேரம் வாக்கு வாதம் நடந்தது.
பின்னர், அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதிமுக பொதுக் கூட்டத்துக்கு வந்த அமைச்சரை 100-க்கும் மேற்பட்ட பெண்கள், பொது மக்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.