எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக புதிய அமைச் சரவையில் யார் யாருக்கு இடம் என்பது குறித்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்கிறார். பழனிச்சாமி தலைமை யிலான அமைச் சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது
தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகி யுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம்
மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். புதிய அமைச்சரவை யில் ஓ. பன்னீர் செல்வம் , மாஃபா பாண்டியராஜன் தவிர ஏற்கனவே இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அனைவரும் இடம் பெறுவர் என தெரிகிறது.
செங்கோட்டையனும் அமைச்சர வையில் இணையலாம். இவர்களுக்கு என்னென்ன துறைகள் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.