எம்.எல்.ஏ.,விற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவமரியாதை !

தமிழக முதல்வராக பொறுப்பேற்று உள்ள எடப்பாடி பழனி சாமிக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. 
எம்.எல்.ஏ.,விற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவமரியாதை !
குறிப்பாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும், சசிகலாவிற்கு எதிரானவர்களும், எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக போராட்டங்கள் துவங்கி உள்ளன.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.செல்வம், எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், நடேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு 

ஓன்று திரண்ட சுமார் நூறுக்கும் மேற்பட்டோர், முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனி சாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் மக்களின் விருப்பதற்கு மாறாக செயல்பட்டு வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பி னர்களை கண்டித்தும், 

மக்களை மதிக்காத அதிமுக சட்ட மன்ற உறுப் பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திட வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்,
இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே. செல்வம், நாளை நடைபெற உள்ள வாக்கெடுப்பில், 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் விருப்பதற்கு ஏற்ப வாக்களிக்க வேண்டும் என்றும் இல்லை யென்றால் பணத்தை பெற்று கொண்டு வாக்களித் ததாகவே மக்கள் எண்ணு வார்கள் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் முதல்வர் பதவிக்கே தகுதி இல்லாத ஒருவரை நியமித்து இருப்பது கண்டிக்க தக்கது என்றும், 

இதற்கு உறுதுணை யாக இருக்கும் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்திட வேண்டும் என்றும் வலியு றுத்தினார்.
இதனை தொடர்ந்து அனுமதி யின்றி போராட்ட த்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அனை வரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. சில ஊர்களில் அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களின் படத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings