எம்எல்ஏவை வளைக்க கோடிகளை கொட்டும் சசிகலா !

1 minute read
இதுவரை யார், யாரோ எம்எல்ஏக்களாக இருந்து உள்ளனா். அந்த எம்எல்ஏக் களைவிட அதிக உயா்வான எம்எல்ஏக் களாக உருவானவர்கள், தற்போது உள்ள அதிமுக எம்எல்ஏக்கள்.
எம்எல்ஏவை வளைக்க கோடிகளை கொட்டும் சசிகலா !
இவா்கள் இங்கு இருந்தால் ரூ 10 கோடி, எதிர்காலத்திலும் கவனிப்பு தொடரும், ஒ.பி.எஸ் எம்எல்ஏக் களாக இருந்தால் ரூ 15 கோடி, அமைச்சர் பதவியும் தருவதாக வாக்குறுதிகள் கொடுக்கப் பட்டு வருகிறது.

சசிகலாவிடம் இருந்து இதுவரை யாரும் பணம் பெற்றது கிடையாது. அவரிடம் பணம் கொடுத்துதான் எம்எல்ஏ, எம்பி, மந்திரி பதவிகள் எல்லாம் பெற்றுள்ளனா்.

அதிகம் சம்பாதித்த எம்எல்ஏ, அமைச்சா்கள் என்றால் அழைத்து பணம் கேட்பார்கள் இல்லை என்றால் அவர்களை அடித்து, உதைத்து அனைத்து சொத்துக்களையும் பிடுங்கி விடுவர். இது தான் வரலாறு.

முதல் முறையாக சசிகலா எம்எல்ஏக்கள் கேட்கும் பணத்தை கொடுத்து முதல்வர் பதவியை பிடிக்க திட்டம் தீட்டி எம்எல்ஏக்களை கடத்தி அடைத்தும் வைத்துள்ளார்.

இவரை ஆதரிக்கும் எம்எல்ஏக்களுக்கு 10 கோடியும், ஒ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து வந்தால், அழைத்து வந்தவருக்கும் எம்எல்ஏவுக்கும் ரூ 15 கோடியும். ஒ.பி.எஸ். ஆதரவு எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்க முடிவு செய்து,
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்து வருகிறது. இது நடக்குமா என்பது தெரியாமல் விழிப்பிதுங்கி உள்ளது மன்னார்குடி கூட்டம். பணம் கொடுப்பதைப் போன்று கொடுத்துவிட்டு,

ஆட்சியில் சசி அமர்ந்தவுடன் அடித்து பணத்தை பிடுங்கி விடுவார்களே என்று பயமும் எம்எல்ஏக்களிடம் உள்ளது. இதனால் சசி தரப்பு எம்எல்ஏக்கள் தப்பித்து வர முயற்சி செய்து வருகின்றனா்.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings