எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்த காரணம்? சொல்கிறார் தமிழிசை !

தமிழக சட்ட சபையில் நேற்று பெரும் களபரங்கள் நடந்தேறிய போது அதிமுக எம்எல்ஏ க்கள் அமைதியாகவே இருந்தனர். 
எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்த காரணம்? சொல்கிறார் தமிழிசை !
அதற்கான காரணத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான அமைச்சரவை நேற்று சட்ட சபையில் பெரும் பான்மையை நிரூபித்தது. அப்போது திமுக வினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரினர். 

இதற்கு சபாநாயகர் சம்மதிக்காததால் திமுக வினர் பேப்பர்களை கிழித்து வீசியும் நாற்காலிகளை வீசியெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. 

இதை யடுத்து சபைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உட்பட திமுகவினர் பலரின் சட்டைகள் கிழிக்கப் பட்டன.

சட்டசபையா, சட்டையை கிழிக்கும் சபையா?
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித் துள்ளார். 

அவர் கூறியதாவது, இது சட்டசபையா.. அல்லது சட்டையை கிழிக்கும் சபையா எனத் தெரிய வில்லை.

என்ன நடக்குதுன்னே தெரியல

எதிர்கட்சி தலைவர் சட்டை கிழிக்கப் பட்டது, முதலில் அவர் அனுமதி க்கப்பட வில்லை என்றார், சோதனை நடத்தப் பட்டது என்றார். என்னத்தான் நடக்கிறது என்பது தெரிய வில்லை.

கூவத்தூர் மனநிலை

கூவத்தூரில் அடைக்கப் பட்டவர்கள் அந்த மனநிலை யிலேயே இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் அப்படியே அமர்ந்து இருந்தார்கள். அதிலிருந்து அவர்கள் வெளியே வர வில்லை.

ரகசிய வாக்கெடுப்பு சரிதான்
திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரியது சரியானது தான். வாக்கெடுப்பு நடக்கும் இடம் அமைதியான சூழலாக இருக்க வேண்டும். அமைதியான சூழலில் வாக்கெடுப்பு நடக்க வேண்டும்.

நேர்மையான களமாக இருக்கனும்

இது வருங்கால தமிழகத்தை வழிநடத்தும் ஒரு நிகழ்வு. ஒட்டு மொத்த அளவில் சட்டசபை நேர்மையான களமாக திகழ வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings