எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க வேண்டும்... ஆச்சார்யா !

தமிழக சட்ட சபையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏ க்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டு மானால் ஜனாதிபதி ஆட்சி இருந்திருக்க வேண்டும் என்ற மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித் துள்ளார்.
எம்எல்ஏக்கள் சுயமாக வாக்களிக்க வேண்டும்... ஆச்சார்யா !
அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து அரசியல் களத்தில் அன்றாடம் ஒரு பரபரப்பு காட்சிகள் அரங்கேறிக் கொண்டி ருக்கிறது. 

இதன் ஒரு கட்டமாக இன்று தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஆனால், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என்றும் 

தமிழகத்தில் 3 மாதத்திற்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஆஜரான ஆச்சார்யா கூறி யுள்ளார். 

மேலும், தமிழக எம்எல்ஏக்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என குறிப்பிட்டுள்ள ஆச்சார்யா, 
தற்போதைய சூழலில் எம்எல்ஏ க்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் நிலை தமிழகத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார். 

கூவத்தூர் ரிசாட்டில் அடைந்து வைக்கப் பட்ட எம்எல்ஏ க்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வாய்ப்பு தரப்பட வில்லை என்றும் வக்கீல் ஆச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings