எம்.ஆர். தடுப்பூசி? சர்வதேச பின்னணி !

தமிழ்நாடு முழுவதும் தட்டம்மை மற்றும் ருபெல்லா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியுள்ளது. அதற்குள், புதுச்சேரி ஆரியூர் பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் வாந்தி மயக்கத்தால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
எம்.ஆர். தடுப்பூசி? சர்வதேச பின்னணி !
தமிழகத்தை சோதனைக் களமாகப் பயன்படுத் துகிறது சுகாதாரத்துறை. அதற்காக 1.8 கோடி குழந்தைகளைப் பணயம் வைக்கின்றனர் எனக் கொந்தளிக் கின்றனர் சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர்கள்.

தமிழ்நாடு, கர்நாடகம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத் தீவுகள் ஆகிய ஐந்து பகுதிகளில் மீசெல்ஸ்-ருபெல்லா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. 

3.6 கோடி குழந்தைகளை மையமாக வைத்து தடுப்பூசி முகாம் நடத்தப் பட்டு வருகிறது.

தடுப்பூசி குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில், முதல் கட்டத்திலேயே தமிழகம் தேர்வு செய்யப்பட் டிருக்கிறது.

ஒன்பது மாதம் நிறை வடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

தட்டம்மை மற்றும் ருபெல்லாவை இந்தத் தடுப்பூசி கட்டுப் படுத்தும். இந்தத் தடுப்பூசி குறித்து பல்வேறு வகைகளில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

வழக்கமான தடுப்பூசிகளைப் போன்றே இதுவும் வழங்கப்படும். இதுகுறித்து, பொதுமக்கள் பயப்பட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர் களுக்கு இந்தத் தடுப்பூசி குறித்த கையேடு வழங்கப்படும்.

இந்தத் தடுப்பூசி குறித்து, யாரேனும் தவறான தகவல் பரப்பினால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எச்சரிக்கைத் தொனியுடன்.
சோதனைக் களமா தமிழகம்?

மீசெல்ஸ் ருபெல்லா தடுப்பூசி குறித்து சுகாதாரத் துறை அமைச்சரோ, அதிகாரிகளோ சொல்கின்ற கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும். 

தற்போதுள்ள சூழலில், இந்தத் தடுப்பூசிகள் உடனடித் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. தவறான தகவல்களைப் பரப்புவது அரசின் சுகாதாரத்துறை தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். 

தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவலின்படி, மாநிலத்தில் தட்டம்மையால் கடந்த ஆண்டு பாதிக்கப் பட்டவர்கள் 509 பேர் என்கின்றது.

ஆனால், பத்திரிகைகளில் ஆண்டுக்கு 2 ஆயிரம் பேர் பாதிக்கப் படுவதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. 

இந்தத் தரவுகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட தரவுகள் தானா என்ற கேள்வியும் எழுகிறது" என்கிறார்

சூழல் பாதுகாப்புக் கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர். புகழேந்தி. இவரும் கோவை மருத்துவர் ரமேஷ் ஆகியோர் 
இணைந்து மீசெல்ஸ் ருபெல்லா குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண் டுள்ளனர். இது குறித்து நம்மிடம் விரிவாகப் பட்டியலிட்டார் புகழேந்தி. 

புகழேந்தி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக் கான குழந்தைகள் வயிற்றுப் போக்கு, நிமோனியா காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டு இறக்கும் அவலம் தொடர்கிறது.

ஊட்டச் சத்துக் குறைவைப் போக்குதல் மற்றும் உரிய மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்படுதல் மூலம் இந்த மரணங்களைத் தடுக்க முடியும். 

குறைந்த பட்சம், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு, பன்றி-பறவைக் காய்ச்சல்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுக ளுக்கு அரசு முன்னுரிமை கொடுப்பதில்லை.

ஐந்து சதவீத மக்களைப் பாதித்து, ஒரு சதவீத மரணத்தை ஏற்படுத்தும் நோய்களைத் தடுக்க நூறு சதவீத மக்களுக்கு தடுப்பூசி கொடுப்பது அறிவார்ந்த செயலா?' என்ற கேள்வியை, நாங்கள் எழுப்பவில்லை.

2010-ம் ஆண்டில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் இந்தியாவின் முன்னணி ஆய்வாளர்கள் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளனர். 

ஏற்கனவே மீசெல்ஸ்-ருபெல்லா நோய்களைத் தடுக்க MMR (மீசில்ஸ் மம்ப்ஸ் ருபெல்லா) தடுப்பு ஊசி ஒன்பது மாதக் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நோயினால் தமிழகத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை' என புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 

அப்படியிருக்கும் போது, புதிதாக எம்.ஆர் தடுப்பூசி என்ற பெயரில், ஒன்பது மாதக் குழந்தையில் இருந்து 15 வயது வரை உள்ள அனைவருக்கும் 

ஒரே மாதத்திற்குள் 1.8 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய அவசர அவசியம் ஏன்? தமிழ்நாட்டைவிட, பிற மாநிலங்களில் தட்டம்மை மற்றும் ருபெல்லாவின் பாதிப்புகள் பல மடங்குகள் உள்ளன' என தரவுகள் தெரிவிக்கின்றன.

அப்படியிருக்கும் போது, அதிகம் பாதிப்புக் குள்ளான பிற மாநிலங்களில் இந்தத் தடுப்பு ஊசியைப் போடாமல், தமிழ்நாட்டில் இருந்து தொடங்குவது தான் சந்தேகத்தை வலுப்படுத் துகிறது.

தமிழகத்தில் தட்டம்மை நோயை உருவாக்குவதில் D8, D4, D7 ஜீனோ டைப் ஆகியவற்றைக் கொண்ட வைரஸ் கிருமிகளே பங்கு வகிக்கின்றன' என்பதை அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

ஆனால், புதிய தடுப்பூசியில் இருக்கும் வைரஸ் கிருமியோ ஜீனோடைப் A-வைச் சார்ந்ததாக உள்ளது. 

இந்த வேறுபாடு காரணமாக, நோய்த்தடுக்கும் திறன் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாமல் போக வாய்ப்பு உள்ளதை இன்பெக்ஸ்சியஸ் டிஸ்சீஸ் என்ற அறிவியல் இதழ் சுட்டிக் காட்டுகிறது.
தடுப்பூசி குறித்த ஆய்வுகளை முழுமையாகப் பரிசோதித்த பிறகே, பயன்படுத்துவது அறிவார்ந்த செயலாக இருக்கும் என்பதை முன் வைக்கிறோம்.

30 நிமிட அபாயம்!

அதே போல், மீசெல்ஸ் ருபெல்லா தடுப்பு ஊசியால், காய்ச்சல், உடம்பெங்கும் செந்நிறப் புள்ளிகள் தோன்றுதல், 

பிளேட்லெட் அணுக்கள் குறைவது, நரம்பு மண்டல பாதிப்புக்கு உள்ளாவது (ஆட்டிசம் நோயும் இதில் அடக்கம்),

மோசமான ஒவ்வாமை போன்ற பின் விளைவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது' என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை முன்வைக்கிறது. 

தடுப்பு ஊசித் துறையின் மத்திய இணை இயக்குனர் டாக்டர் பிரதீப் ஹால்தர், இந்தத் தடுப்பு ஊசி பொதுவாகப் பாதுகாப்பானது தான் என்று குறிப்பிட்டாலும், 

அதிகபட்சமாக ஐந்து சதவீதம் பேர், அதாவது நூற்றுக்கு 5 பேர் பின்விளை வுகளால் பாதிக்கப் படலாம் என்ற கருத்தையும் அவர் தெரிவித்தி ருக்கிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23, 2008-ம் ஆண்டு திருவள்ளூரில் நான்கு குழந்தைகள் தட்டம்மைத் தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்து விட்டன.
எம்.ஆர். தடுப்பூசி? சர்வதேச பின்னணி !
அதைத் தொடர்ந்து ஜூன் 17-ம் தேதியன்று இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் சங்கம்(IAP), ' ஒவ்வாமை ஏற்பட்டால் அதை சரி செய்யும் கருவிகள் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், அங்கு கருவிகள் இல்லை' எனப் பதிவு செய்துள்ளது. வேதனை என்னவென்றால், சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு ஊசி தகவல் குறிப்பிலேயே, ' ஒவ்வாமை ஏற்பட்டால்

அதனை சரி செய்யத் தேவையான அட்ரினலின், ஸ்டீராய்டு, ஹிஸ்டமின் எதிர்ப்பு ஊசி மருந்துகளும் பிராண வாயுவும் அருகிலேயே தயாராக இருக்க வேண்டும்' எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், ஊசியைப் போட்டுக் கொண்ட அனைவரும் அடுத்த 30 நிமிடங்களுக்கு மருத்துவரின் கண்காணி ப்பில் இருக்க வேண்டும் என்றும் அது தெரிவிக்கிறது. 

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை என்ன நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளது?

ஆட்டிசம் அபாயம்!?

1986-ம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள கார்பஸ் கிறிஸ்டி என்ற இடத்தில் இந்தத் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டவர்களில் 99 சதவீதம் பேர் தட்டம்மையால் பாதிக்கப் பட்டனர்.

(ஆதாரம்: Tracy Gustafson et al, “Measles Outbreak in a Fully Immunised Secondary School Population”, NEJM 1987 316: 771-4). 1993-ம் ஆண்டு போடப்பட்ட ருபெல்லா தடுப்பு ஊசிக்குப் பின் 

கிரீஸ் நாட்டில் ருபெல்லா நோயினால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கூடியதே தவிர குறையவில்லை என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்று 1999-ம் ஆண்டில் வந்த பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகி உள்ளது. 

ருபெல்லா தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்ட பிறகு நாள்பட்ட மூட்டுவலி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்று 

கிளினிக்கல் இன்பெக்சியஸ் டிஸ்சீஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை நிரூபிக்கிறது.

அதே போல், ஜப்பான் அரசானது இந்தத் தடுப்பு ஊசியை அதன் முக்கியப் பின் விளைவான நான் வைரல் மெனிங்கிடிஸ் (Non Viral Meningitis) காரணமாக 1993-ம் ஆண்டில் தடை செய்தது.

(ஆதாரம்:Why Japan stopped using MMR”, 8 February, 2002). அமெரிக்காவில் கூட மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்புகளில் வெறும் பத்து சதவீதம் தான் 

வெளிச்சத்திற்கு வந்து பதிவு செய்யப் படுகின்றது என்று அந்த நாட்டின் நோய்த் தடுப்பு மையம் (Centre for Disease Control) கூறுகிறது.
தற்போது தமிழகத்தில் இந்தத் தடுப்பு ஊசியைக் கொடுத்த பிறகு ஏற்படும் பாதிப்புகளைப் பெற்றோர்கள் தான் 

மருத்துவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று இருக்கும் போது அதற்கான விழிப்பு உணர்வுப் பிரசாரத்தைத் தமிழக அரசு செய்துள்ளதா?

மத்திய சுகாதாரத் துறையின் தடுப்பு ஊசிக்குப் பிறகு ஏற்படும் பின் விளைவுகள் (Adverse Effects Following Immunisation – AEFI) குறித்த அறிக்கையில், 

2014-ம் ஆண்டில் தமிழகத்தில் தட்டம்மை தடுப்பு ஊசிக்குப் பிறகு 2 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன' என்ற தகவல் உள்ளது.

தட்டம்மைத் தடுப்பு ஊசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் உள்ள உறவு மிக முக்கியமானது. 

வாஷிங்டனில் உள்ள தடுப்பூசி பாதுகாப்பு ஆய்வு கமிட்டியின் மருத்துவ மையம்((IOM) வெளியிட்ட அறிக்கையில், இவை இரண்டிற்கும் நேரடித் தொடர்பு இல்லை' என்று கூறுகிறது.

ஆனால், ' ஆட்டிசம் நோய் வரவே வராது என்று கூறிவிட முடியாது' என்றும் 'இந்த ஊசியைக் கொடுக்கும்போது ஆட்டிசம் குறித்த கவனம் இருக்க வேண்டும்' என்பதை வலியுறுத் துகிறது. ​

அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையத்தின்(CDC) மையத்தின் முன்னாள் தலைவர் ஜூலி ஜெர்படிங், சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 

தட்டம்மைத் தடுப்பு ஊசிக்குப் பிறகு ஆட்டிசம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.

எமனாகும் எம்.ஆர். தடுப்பூசி?

ஒரு மக்கள் குழுவின் நூறு சதவீத மக்களும் எம்.எம்.ஆர் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்டாலும் கூட, அந்தத் தடுப்பு ஊசி 

அவர்களைத் தட்டம்மை ருபெல்லா விலிருந்து நூறு சதவீதம் பாதுகாக்காது என்றே ஆய்வுகள் கூறுகின்றன.
இது குறித்து டாக்டர் பிரதீப் ஹல்தார் கூறும் போது, ' 15 சதவீத மக்களுக்கு அது நோய் எதிர்க்கும் திறனைத் தூண்டவில்லை. 

5-10 சதவீத மக்களுக்கு அது 5 ஆண்டுகளுக்குப் பின் நோய் எதிர்ப்பைக் கொடுக்க வில்லை' என்று கூறியுள்ளார்.

( ஆதாரம்: Dr.Pradeep Haldhar, Deputy Commissioner, Immunisation) Union Ministry of Health, 29 January 2017). 

தமிழக அரசும், பத்திரிகைகளின் வாயிலாக 'ஐம்பது சதவீத ருபெல்லா நோய் தடுக்கப் படலாம்' என்றே கூறுகிறது. ​தடுப்பு ஊசி கொடுத்தபின் உருவாகும்

நோய் எதிர்ப்புப் புரதத்தின் அளவிற்கும் நோய்த் தடுக்கும் திறனுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 

தமிழ்நாட்டில், வேலூரில் ஒன்பதாம் மாதத்தில் தட்டம்மைத் தடுப்பு ஊசி கொடுக்கப் பட்டவர் களுக்கு

அவர்களது நான்காம் வயதின் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 66 சதவீத நபர்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்புப் புரதம் அவர்களின் ரத்தத்தில் இருந்ததாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

குழந்தைப் பருவத்தில் தட்டம்மை பாதிப்புக்கு உள்ளானவர்க ளுக்கு பின்வரும் காலங்களில் சில வகைத் தோல் வியாதிகள், 

சிலவகைப் புற்றுக் கட்டிகள், முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு மற்றும் மூட்டுத் தேய்மானப் பிரச்சினைகள்,

அந்நோயால் தாக்கப்படாத வர்களைக் காட்டிலும் குறைவாக ஏற்படுகின்றன என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக, இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் 45 சதவீத குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளனர். 

குறிப்பாக, தமிழ்நாட்டில் அது 32 சதவீதமாக ஆக உள்ளது. ஊட்டச் சத்துக் குறைவைப் போக்கி நோய் எதிர்ப்புத் திறனைப் பெருக்க மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன?

ஊட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகளைக் கொடுத்த பிறகு எதிர்பார்த்த நோய் எதிர்ப்புத் திறன் கிடைக்கவில்லை என்பதை மருத்துவர் சந்திரா பதிவு செய்துள்ளார்.
எம்.ஆர். தடுப்பூசி? சர்வதேச பின்னணி !
(R.K.Chandra, Nutritional Deficiency and susceptibility to Infection, Bulletin of WHO). 

வைட்டமின் ஏ சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டாலும் அந்நோயால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

அதை சரி செய்ய இரண்டு நாட்களுக்கு 2 லட்சம் ஐ.யு என்ற அளவில் வைட்டமின் ஏ கொடுக்கப் பட்டால் இறப்பு விகிதம் வெகுவாகக் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ​

1986-1994 வரை ஒன்பது மாநிலங்களில் மேற்கொள்ளப் பட்ட தட்டம்மை தடுப்பு ஊசியால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிய மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், 

115 பேர் பாதிப்புக்குள் ளானார்கள்' என்றும் அவர்களில், 79 பேர் மரண மடைந்தனர் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மீண்டும் திரும்பும் 1980!

மருத்துவ முகாம்இந்தத் தடுப்பு மருந்துகளில் 40 பாட்டில்கள் ஆய்வுக் குள்ளாக்கப் பட்டன. அவற்றில் 19 பாட்டில்கள் சீரம் இன்ஸ்ட்டியூட் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டவை.

இந்த பாட்டில்களில் இருந்து உபயோகிக் கப்பட்ட தடுப்பு மருந்து 15 பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத் தியது என்பதை அந்த ஆய்வு முடிவுகள் கண்டறிந்தன.

இந்தப் படிப்பினை யைத் தமிழகப் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் நினைவில் வைத்திருக் கிறார்களா?

(ஆதாரம்: D.K.Sood et al., “Adverse reactions after measles vaccination in India”, The National Medical Journal of India, Vol 8, No.5, 1995 p.208-210). 

நம் நாட்டு மக்களிடம் இந்த மீசெல்ஸ், ருபெல்லா (எம்.ஆர்) தடுப்பு ஊசி பரிசோதனை செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு,
நோய் தடுக்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்யும் ஆய்வுகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்காமல் வெறுமனே, இதனால் பிரச்சினை ஏதும் வராது என்று கூறுவது எப்படி அறிவியல் ரீதியாக சரியாகும்?

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்தத் தடுப்பூசியை மக்கள் அவசியம் போட்டுதான் ஆக வேண்டும் என்று 

நாங்கள் வற்புறுத்த மாட்டோம்; போட்டாலும் போடலாம்; போடாமலும் இருக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கூட, காயத்ரி ஆனந்த் என்ற சமூக ஆர்வலர், எம்.எம்.ஆர் தடுப்பு ஊசி உபயோகப் படுத்தப்பட்டு வரும் போது, 

புதிய எம்.ஆர் தடுப்பு ஊசியைக் கொண்டு வருவதை 90 சதவீத மக்கள் எதிர்க்கின்றனர்' எனத் தெரிவித்தி ருக்கிறார்.

இந்திய ஆய்வுகள், இந்தத் தடுப்பு ஊசி ஒரு வயதுக்கு மேலே உள்ள குழந்தைக ளுக்குக் கொடுக்கப்படும் போது தான், நோய்த் தடுப்புப் புரதம் அவர்களுக்குள்

அதிகம் உண்டாவதை உறுதிப் படுத்திய நிலையிலும் கூட ஒன்பதாவது மாதத்திலேயே இதைக் கொடுக்க வேண்டும் என்று அரசின் திட்டம் இருக்கிறது. 

ஆனால், பல நாடுகளில் இது ஒன்று அல்லது அதற்கு மேலான வயதில்தான் கொடுக்கப் படுகிறது.

1980-ம் ஆண்டில் ரோட்டரி சங்கம் மூலம் தட்டம்மை தடுப்பூசி அனுமதியில்லாமல் தமிழகத்திற்குள் நுழைந்தது. 

1990-ம் ஆண்டில் தான் தட்டம்மை தடுப்பூசியை திட்டத்தில் சேர்த்துக் கொண்டது மத்திய அரசு. அதே போன்ற சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளதாகவே அஞ்சுகிறோம்.
குறிவைக்கப் பட்ட கறுப்பின குழந்தைகள்!

1989-91 ஆண்டு காலகட்டத்தில், கெய்சர் பெர்மணன்டே(Kaiser Permanente) நிறுவனமும் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மையம் (CDC) 

இணைந்து கூடுதல் வீரியம் கொண்ட Edmonston Zagreb வைரஸின் அடிப்படை யிலான தடுப்பு ஊசியை

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் படி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள 1,500 குழந்தைகளுக்குப் போட்டனர். 

இந்தத் தடுப்பு மருந்து வீரியம் கூடியது என்பதை இந்த நிறுவனங்கள் குழந்தைகளின் பெற்றோ ர்களிடம் மறைத்தது மட்டு மல்லாமல்,

இந்த மருந்து அரசின் உரிமம் பெறாதது என்பதையும் மறைத்து விட்டார்கள். 

இந்தக் குழந்தைகள் பெரும்பாலானோர் கருப்பின–லத்தீன் இன ஏழைக் குழந்தைகள். இந்தப் பரிசோதனையில் 35 குழந்தைகள் இறந்து விட்டனர்.

இதனை லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளிக்கொண்டு வந்தது. சி.டி.சியும் இதை ஒத்துக் கொண்டது. 

1989-ம் ஆண்டில் இந்தத் தடுப்பு ஊசியைப் பரிசோதனை செய்வதற்கான அனுமதியை உலக சுகாதார நிறுவனம் வழங்கியது.
ஆனால், இந்தப் பரிசோதனைகள் 1985-ம் ஆண்டிலிருந்தே டோகோ, ஐவரி கோஸ்ட், ஜேய்ரெ, பெரு, மெக்சிகோ, தாய்லாந்து, 

நியூ கினி, பிலிப்பைன்ஸ், ஹைத்தி, கினி பாசு, கேம்பியா மற்றும் செனெகல் ஆகிய நாடுகளில் பரிசோதனைக் குள்ளாக்கப் பட்டன.

இந்தப் பரிசோத னைகளில் நடுத்தரம் மற்றும் கூடுதல் வீரியம் மிக்க வகையில் அமைந்த தடுப்பு ஊசி பயன்படுத் தப்பட்டது. கினிபாசு மற்றும் கேம்பியாவில்

இந்த வகை தடுப்பு ஊசிகளைப் போட்டுக் கொண்ட குழந்தைகள் குறைந்த வகை வீரியம் கொண்ட ஈ.இசட் வகை தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்ட குழந்தைக ளைவிட அதிகம் இறந்து போயினர்.

லாஸ் ஏஞ்செல்ஸ் ரகசியம்!

தடுப்பூசிஇவர்களில் பெண் குழந்தைகளே பெரும்பாலானோர் என்று 1990ம் ஆண்டு ஜனவரியில் முன் வைக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன. 

எனினும் உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளைத் தொடர வேண்டும் என்றது.
எம்.ஆர். தடுப்பூசி? சர்வதேச பின்னணி !
இதனைத் தொடர்ந்து ஹெய்ட்டி நாட்டில் மேற்கொள்ள ப்பட்ட ஒரு ஆய்வும் மேலே கூறிய லாஸ் ஏஞ்சலஸ் நகர ஏழைக் குழந்தைகள் மீது நடத்தப் பட்ட ஆய்வும் இந்த முடிவுகளை மீண்டும் உறுதி செய்தன.

இதன் பின்னர் கூடுதல் வீரியம் கொண்ட ஈ.இசட் வகை வைரஸ் அடிப்படையிலான தட்டம்மை தடுப்பு ஊசியை 1992 ஜூன் மாதம் உலக சுகாதார நிறுவனம் தடை செய்தது.

அதேபோல், 1980-ம் ஆண்டில் ரோட்டரி சங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டு தமிழக அரசால் போடப்பட்ட உரிமம் வழங்கப்படாத ஊசி எந்த வகைத் தடுப்பு ஊசி? அதனால் பாதிப்புகள் ஏற்பட்டனவா?

இதுகுறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வைத்திருக்கிறதா? தற்போது கொடுக்கப்படவுள்ள எம்.ஆர் தடுப்பு ஊசியிலும் மேற்கூறிய Edmonston Zagreb வகை வைரஸ்தான் உள்ளது என்று சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு ஊசித் தகவல் குறிப்பிலேயே உள்ளது.

ஆனால், இது எந்தவகை வீரியத்தைக் கொண்டது என்பது குறித்த தகவல்கள், (லாஸ் ஏஞ்செல்ஸ் பரிசோதனையைப் போல) ரகசியமாகக் கூட இருக்கலாம். 

அனைத்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும் என ஆதாரங்களை அடுக்கிய மருத்துவர் புகழேந்தி, இறுதியாக,
மக்களிடமே விட்டுவிடுங்கள்!

தட்டம்மை நோயைத் தடுப்பதில் வைட்டமின் ஏ–விற்குப் பெரும்பங்கு உள்ளது என்பதை இன்று அறிவியல் உலகம் அனைத்தும் ஆய்வுகள் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜனநாயக ரீதியாக விவாதங்கள் ஏதும் இன்றி மேலிருந்து கீழாகத் திணிக்கப்படும் தடுப்பு ஊசிக் கிருமிகள் உள்ளூர்க் கிருமிகளைக் காலி செய்து வேற்று நாடுகளின் பிடியில் இருக்கும்

செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கிருமிகளை (Designer Virus) நம்முள் புகுத்தும். பின்னர் அவர்கள் துணையின்றி நம்மால் அதனைக் கட்டுப்படுத்த இயலாமல் போகும் நிலைமை உருவாகும்.

இதில் உள்ள உண்மையினை 2003-ம் ஆண்டில் ஆல்ஃபிரட் கிராஸ்பி எழுதிய எகாலஜிக்கல் இம்பீரியலிசம் (Ecological Imperialism) புத்தகத்தில் பதிவு செய்துள்ளதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

ஐரோப்பியக் கண்டத்திலிருந்து கிளம்பிய கொலம்பஸ் குழுவினர் 1492-ம் ஆண்டில் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டெடுத்த பின்னர்,

அவரது சந்ததியர்களால் உலகெங்கும் சிஃபிலிஸ், மீசில்ஸ், டைஃபஸ், பெரியம்மை போன்ற நோய்கள் பரப்பப்பட்டன. 

இதனால், பல்வேறு பூர்வகுடி இன மக்கள் பூண்டோடு அழிந்து போயினர் என்பதை ஆல்ஃபிரட் கிராஸ்பி விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

புதியவகைக் கிருமிகளை (exotic) கட்டுப்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் இருப்பதால் பாதிப்பையும் ஏற்படுத்தி, 
சிகிச்சைக்கான தீர்வையும் முன் வைத்து அவர்களுக்கு சாதகமாக கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பு இல்லை என்று

எவராலும் அறுதியிட்டுக் கூற முடியுமா? தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்கனவே எம்.எம்.ஆர் தடுப்பு ஊசி பயன்பாட்டில் இருக்கும் போது, 

இந்தப் புது எம்.ஆர் தடுப்பு ஊசியினை அறிமுகப் படுத்துவதற்கான தேவை என்ன?

அதுவும் ஒரே மாதத்திற்குள் ஒன்பது மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்- சிறுமியர் களுக்கு எந்த அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் தடுப்பூசி போடுகிறார்கள்?

இதன் சாதக, பாதகங்களை ஒளிவுமறை வின்றி மக்களிடம் தெரியப்படுத்தி, சட்டரீதியாக எவரையும் வற்புறுத்தாமல் 

தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதா வேண்டாமா என்பதை முடிவெடுக்கும் உரிமையை மக்களிடமே விட்டு விட வேண்டும். 
அது தான் மக்கள் நலனை விரும்பும் அரசு செய்ய வேண்டிய முக்கிய பணியாக இருக்க முடியும்" எனக் கவலையோடு பேசி முடித்தார்.

பின்குறிப்பு: எம்.ஆர். தடுப்பூசி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், மருத்துவர்கள் இதுபற்றி கருத்துக் கூற விரும்பினால், கமென்ட்டில் பதிவு செய்யவும்.
Tags:
Privacy and cookie settings