நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ள நிலையில், இதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை
பெறுவதற்காக இதனை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அதிகாரிகள் இன்று நேரில் ஒப்படைத்தனர்.
மருத்துவப் படிப்புகளு க்கான மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.
வரும் மே 7-ம் தேதி முதல் இத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பதால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதை யடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதற்காக, தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டத்திருத்த மசோதா நிறை வேற்றினார்.
பிறகு இந்த மசோதா மாநில ஆளுநரின் ஒப்புதலுக்குச் சென்றது. இந்நிலையில் ஆளுநர் அனுமதிக்குப் பிறகு இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தரப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை தமிழக சுகாதாரத் துறை துணை செயலாளர் கந்தசாமி, சார்பு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக த்திடம் நேரில் ஒப்படை த்தனர்.
இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழக அரசின் 'நீட்' மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவது அவசிய மாகும்.
இனி மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக த்தின் 'நீட்' மசோதாவை சம்பந்தப் பட்ட மத்திய அமைச்ச கங்களுக்கு அனுப்பி வைத்து அவற்றின் கருத்து களை கேட்கும்.
மனித வள மேம்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை, சட்டத் துறையின் இரு பிரிவுகள் (Legislative and Legal Affairs) ஆகிய வற்றுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.
இவற்றின் கருத்து களை பெற்ற பிறகு உள்துறை அமைச்சகம் தனது கருத்தையும் சேர்க்கும்.
இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். இந்த ஒப்புதலுக்குப் பிறகே 'நீட்' தேர்வில் இருந்து தமிழக த்துக்கு விலக்கு கிடைக்கும்.
மத்திய அரசு ஏற்குமா?
இந்நிலையில் இந்த மசோதா தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும் போது, 'தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும்
வகையில் 'நீட்' தேர்வு தொடர்பாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பி யுள்ளதாக தெரிகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைப்பது கடினம்.
தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை பொறியியல் படிப்புக்கும் அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனவே இந்த மசோதாவை மத்திய அரசு ஏற்காதுஎன கருதுகிறோம்'' என்று தெரிவித்தனர்.
வழக்கமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் படும் மசோதாக் களுக்கு மத்திய அரசின் ஒத்து ழைப்பு இல்லாமல் அனுமதி கிடைப்ப தில்லை.
இந்நிலையில் மசோதா வில் சில விளக்கங்கள் கேட்டும் அதனை தமிழக அரசுக்கு மத்திய அமைச்சகங்கள் திருப்பி அனுப்பவும் வாய்ப்புள்ள தாக கருதப் படுகிறது.