கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி, ஷியாம் நாராயண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவினால், திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும்
முன்பு தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதி மன்றம் பிறப்பித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்ப ட்டது.
அதில், திரைப் படத்தின் இடையில் வரும் காட்சிகள் மற்றும் ஆவணப் படங்களிலும் தேசிய கீதம் ஒலிக்கப் பட்டாலும் எழுந்து நிற்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப் பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் தெரிவித்த கருத்தில் படத்தின் காட்சிகள்,
செய்திப்படம் மற்றும் ஆவணப் படங்களில் தேசிய கீதம் இசைக் கப்படும் போது பார்வை யாளர்கள் எழுந்து நிற்க அவசிய மில்லை என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப் பட வேண்டி யுள்ளதால் இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து ள்ளனர்.