சசிகலா உயிருக்கு ஆபத்து காளஹஸ்தி தீ விபத்து !

8 ஆம் தேதி காளஹஸ்தி கோவிலின் கும்பாபிஷேம் நடக்க விருந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தீவிபத்து ஏற்பட்டது.
சசிகலா உயிருக்கு ஆபத்து காளஹஸ்தி தீ விபத்து !
காளஹஸ்தி பல்வேறு பாவங்களை போக்க பரிகாரங்கள் செய்யும் ஸ்தலமாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு வந்து தரிசித்து செல்கின்றனர்.

கடந்த 2-ம் தேதி தான் கோவிலின் ராஜகோபுரத் துக்கான கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. காளஹஸ்தியை காலன், அதாவது எமன், ஹஸ்தி (அஸ்தி) என்பதை சுடுகாட்டு சாம்பல் என்றும் சொல்வார்கள். 

காளஹஸ்தி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவில் என்றாலும், விஜயநகரப் பேரரசு காலத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களும் ஒன்றாக இருந்தவை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

அதனால் இந்த தீ விபத்து, 3 மாநிலங்களை ஆள்பவர்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்து என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப் படுகிறது.
கடந்த ஆட்சியின் போது, திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கோபுர கலசம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனை யடுத்து, ஜெயலலிதாவே முதல்வராக வந்தும் அவர் ஆட்சியில் நீடிக்க வில்லை.

அதுபோலவே இந்த சம்பவமும் ஆட்சியாளர் களுக்கு ஆபத்தையோ அல்லது நாட்டில் திடீர் பேரழிவையோ ஏற்படுத் தலாம் என்பதற்கான அறிகுறி யாகவே கருது கிறார்கள்.

இந்நிலையில், வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க உள்ளார் என்பதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அவரது குடும்பத்தினர் பயத்தில் உள்ளனர்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தற்போது சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு மீதான தீர்ப்பு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. 
இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை மேலும் கதிகலங்க செய்துள்ளது.

சசிகலாவுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளதால், தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களை வரவழைத்து இதுகுறித்து விசாரிக்க வுள்ளார் என்று தகவல் வெளியாகி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings