திருநங்கைகளுக்கான ஒபாமாவின் அறிவிப்பை ரத்து செய்த ட்ரம்ப் !

அமெரிக்க பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் பாலின விருப்பப் படி கழிப்பறை களை உபயோகி க்கலாம் என்ற முந்தைய ஒபாமா அரசின் உத்தரவை ட்ரம்ப் அரசு ரத்து செய்துள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.
திருநங்கைகளுக்கான ஒபாமாவின் அறிவிப்பை ரத்து செய்த ட்ரம்ப் !
ட்ரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஒபாமா தலைமை யிலான அரசு, அமெரிக்க பள்ளிகளில் திருநங்கை மாணவர்கள் 

தங்களது பாலின விருப்பத்துக் கேற்ப கழிப்பறை களை உபயோகிக்க அனுமதிக்கு மாறு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திருநங்கை மாணவர் களுக்காக ஒபாமா அரசு அறிவுறுத்திய இந்தத் திட்டத்தை புதன் கிழமை ரத்து செய்து உத்தர விட்டுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்க பள்ளி களுக்கு, ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்து வதாகவும், 

தேவையற்ற ஒன்றாகவும் உள்ளது என்று அமெரிக்க நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனை யடுத்து திருநங்கை மாணவர்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி "வெறுப்பு இல்லை, பயம் இல்லை, 

திருநங்கை மாணவர்கள் இங்கு வரவேற்கப் படுகிறார் கள்" என்று ட்ரம்ப்புக்கு எதிராக முழக் கங்கள் எழுப்பினர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற திலிருந்து ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.

மெக்ஸிகோ எல்லையில் சுவர், குடியுரிமை கொள்கையில் மாற்றம், 7 முஸ்லிம் நாடுகளின் மீதான தடை போன்ற ட்ரம்ப்பின் நடவடிக் கைகளுக்கு உலக நாடுகள் மத்தியில் 
எதிர்ப்புகள் எழுந்தி ருக்கும் நிலையில் திருநங்கை மாணவர் களுக்கு எதிரான நடவடிக் கையில் ட்ரம்ப் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings