ஷூக்களில், ஓம் மந்திரம் மற்றும் பீர் பாட்டிலில் பிள்ளையார் படத்தை அச்சடித்து விற்பனைக்கு வெளியிட்ட அமெரிக்கா வை சேர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சமீபத்தில், இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான், இந்திய தேசியக் கொடி பதித்த கால் மிதி ஒன்றை கனடா நாட்டின் இணைய தளத்தில் வெளி யிட்டது.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை யடுத்து, இந்திய தேசியக் கொடி டிசைன் கொண்ட கால்மிதியை இணையத்தில் இருந்து நீக்கப் பட்டது.
இதனை யடுத்து, காந்தியின் முகம் பொறித்த செருப்புகளை விற்பனைக்கு வைத்தது.
இந்திய ர்களின் உணர்வுகளை அவமானப் படுத்தும் இந்த செயலுக்கு பலவகை யிலும் கடும் கண்ட னங்கள் எழுந்தன.
இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த யெஸ்விவைப் என்ற ஆன்லைன் நிறுவனம் ஷூவில் ஓம் படமும், லாஸ்ட்காஸ்ட் என்ற நிறுவனத்தின் பீர் பாட்டிலில் பிள்ளையார் படமும் பொறிக்கப் பட்டு விற்பனைக்கு வந்தது.
இது இந்து மதத்தினரை அவமானப் படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி அந்நிறுவ னத்திற்கு இந்தியர்கள் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
இது குறித்து , டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலரும், சாரணர் இயக்க கமிஷனருமான நரேஷ் கதியான், விஹார் பகுதி காவல் நிலையத்தில் அந்நிறுவ னங்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இதனைதொடர்ந்து, அமெரிக்கா நிறுவனங்கள் மீது, தீய செயல்களுக்கு தூண்டுவது, மத நம்பிக்கை களை அவமதிப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.