இயக்கப் பொறுப்பாளர் கைது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது... கமல் !

தனது இயக்கப் பொறுப்பாளர் கைது செய்யப் பட்டுள்ளது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது என கமல் குற்றஞ் சாட்டியுள்ளார். 
இயக்கப் பொறுப்பாளர் கைது அரசியல் வன்மத்தைக் காட்டுகிறது... கமல் !
தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்து களைத் தெரிவித்து வருபவர் கமல். 

அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல்.

இதற்கு சமூக வலைத் தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். 

இது தொடர்பாக, கமல் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாத த்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். 
ஆனால் எம் இயக்கப் பொறுப் பாளரின் கைது பேச வைக்கிறது. தமிழக ஜல்லிகட்டுப் போராட்டத் தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப் பட்டனர். 

இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது. நமதியக்கத்தார் சற்றதிகமாக கண்ணியம் காக்கும் நேரமிது. 

அளந்து பேசவும் தொடர்ந்து பேசவும். அரசுகள் மாறிமாறி வரினும் நம் கட்சியற்ற கொள்கை மாறாது. எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே. 
இக்கூலியில்லா வேலையை நம் ஆயுளுள்ள வரை செய்வோம். அவர் பலமுறை வருவார் போவர். நிரந்தரம் நம்நாடு என்று காட்டமாக தெரிவித் துள்ளார் கமல்.
Tags:
Privacy and cookie settings