ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் | Opies supporters dismissed from AIADMK !

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி. பொன்னையன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட் டுள்ளனர். 


அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிராக முதலில் கலகக் குரல் எழுப்பி யவர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி. இதை யடுத்து கடந்த 7-ந் தேதியன்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். 

இதை யடுத்து முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், முனுசாமி, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர். நாளுக்கு நாள் இந்த ஆதரவு பெருகிறது.

எம்.எல்.ஏ  மற்றும் எம்பிக்கள்

முதல்வர் ஓபிஎஸ்-க்கு 12 எம்பிக்கள், 11 எம்.எல்.ஏக்கள் தற்போது வரை ஆதரவு அளித் துள்ளனர். அதிமுகவின் மூத்த நிர்வாகி களான மதுசூதனன், பொன்னையன், சங்கரன் கோவில் முத்துச் செல்வி உள்ளிட்ட பலரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

பொருளாளர் பதவி பறிப்பு

ஏற்கனவே முதல்வர் ஓபிஎஸ் வசம் இருந்த பொருளாளர் பதவி பறிக்கப் பட்டது. அதேபோல் அவைத் தலைவர் மதுசூதனன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு புதிய அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப் பட்டார்.

ஓபிஎஸ் நீக்கம்

இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக வின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா அறிவித்தி ருந்தார். 

அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஓபிஎஸ் செயல் பட்டதாக கூறி சசிகலா நடவடிக்கை மேற் கொண்டார்.

ஆதரவாளர்கள் நீக்கம்

தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேபி முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பிஎச் பாண்டியன், மனோஜ் பாண்டியன், பரிதி இளம்வழுதி, ப. மோகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, சங்கரன் கோவில் முத்துச்செல்வி, முத்து ராமலிங்கம், 

அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக சசிகலா அறிவித் துள்ளார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட் டுள்ளது. 

அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதும் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Tags:
Privacy and cookie settings