ஓபிஎஸ் -க்கு பெருகும் சினிமா பிரபலங்களின் ஆதரவு !

2 minute read
கமல்ஹாசன் கூர்ந்து கவனித்து அரசியல் கருத்துக்களை பதிவு செய்பவர். அதே போன்றே தான் நமது திரையுலக மக்கள் இருக்கி றார்களா? 
அவர்களின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து என்ன சொல்லு கிறார்கள்? என்று பாப்போம். 

சில வருடங்களுக்கு முன் ,பிப்ரவரி 7 இதே நாளில் விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக 

ஒரு கலைஞன் போராடிய போது, தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு எப்படி என்று கண்டவன் என்று கமல் சொல்லி இருக்கிறார்.
நடிகர் சித்தார்த்,’ மெரினாவில் ஓபிஎஸ் பேச்சை பார்க்கும் போது,. அரசியல் சீரியல்கள் ஆன ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ ஆகியவற்றை நேரில் பார்க்கிறது போலவே இருக்கு” என்று சொல்லியுள்ளார்.
நடிகை ஸ்ரீப்ரியா,’ஹீரோ:என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,இருட்டினில் நீதி மறையட்டுமே…தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு கடவுள் இருக்கிறான் மயங்காதே” என்று பதிவிட்டு உள்ளார்.
ஆர்யா,’ கரெக்ட்டான நேரத்தில் துணிச்சலான பெஸ்ட் பேச்சு” என்று சொல்லி யுள்ளார். 

நடிகர் அருள்நிதி,’ தைரியமாய் பேசி, தமிழ்நாட்டு மக்களுக்கு நேர்மையாக நடந்து உண்மையை அறியச் செய்து உள்ளார்” என்று சொல்லி யுள்ளார்.

இமான்,’சிறந்த வழி இது தான். நம்பிக்கை துளிர் விட்டு இருக்கிறது. 

சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான பேச்சு! நீதி நிலை நாட்டப் பட்டிருக்கிறது. என்று சினிமா பிரபலங்களில் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
Tags:
Today | 21, March 2025
Privacy and cookie settings